Skip to main content

An accident changed my life - Final

 ரமேஷ் யாரும் இல்லாதவன் என்பதால் என் குடும்பத்தார் சம்மதத்தோடு நெருங்கிய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சூழ எனக்கும் ரமேஷ்க்கும் திருமணம் நடைபெற்றது திருமணத்திற்கு வந்த என்னுடைய உறவினர்கள் எல்லாம் என்னை பார்த்து சிரிக்க நான் எதையும் கண்டு கொள்ளவில்லை மணமேடையில் இருக்கும் என்னை பார்த்து என் முறை பெண்கள் என்னை கைகாட்டி ஏதேதோ பேச மணமேடையில் இருந்த எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. பிறகு ரமேஷ் மணமேடைக்கு வந்து எனதருகே அமர்ந்து ரமேஷ் என் கழுத்தில் தாலி கட்ட எங்கள் திருமணம் அரங்கேறியது 



சொந்த பந்தங்கள் அனைவரும் வாழ்த்த என் தங்கை துணை பெண்ணாக என்னுடன் இருக்க சிறுவயதில் என்ன கட்டிக்க ஆசைப்பட்ட என்னோட முறை பொண்ணுங்க எல்லாம் இன்று என் கணவரிடம் வழிந்து பேச என்னையும் சக பெண்ணை போல நடத்த எனக்கு இன்பமாக இருந்தது அன்று இரவு எங்கள் முதல் இரவு என் கணவன் ரமேஷ் அவர் ஆண்மையை எனக்குள் செலுத்த தாய்மையை அனுபவித்த நான் முதல்முறையாக முழு பெண்மை என்பது என்ன என்று அறிந்தேன் பிறகு இருவரும் சாதாரண தம்பதிகளை போல கணவன் மனைவியாக வாழ்ந்தோம் ரமேஷ் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார் காலையில் அவரை எழுப்பி காப்பி போட்டு கொடுத்து சாப்பாடு செய்து கொடுத்து வேலைக்கு அனுப்புவேன் என்னை விட்டுப் போக அவருக்கு மனமே இருக்காது சோர்ந்த முகத்துடன் வேலைக்கு செல்வார். பிறகு என்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வேன் இரவு அவர் வருவதற்கு முன் அவருக்கு பிடித்த மாதிரி புடவை கட்டிக்கொண்டு ரெடியா இருப்பேன் அவர் மல்லிகைப் பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்து அன்னைக்கு இரவு முழுவதும் நாங்கள் சந்தோஷமா இருப்போம் இதுதான் தினமும் நடக்கிறது ஒரு நாள் நானும் என் கணவரும் அவருடைய குலதெய்வ கோயிலுக்கு செல்லலாம் என்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று இருந்தோம் மழை அதிகமாக வருவதால் குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிட்டு நானும் என் கணவர் மட்டும் சென்று இருந்தோம். அங்கே தற்செயலாக நான் அஞ்சலியை பார்த்தேன் அவள் ஓடிப்போய் கல்யாணம் பண்ண அவ புருஷன் கூட வந்திருந்தா. அவளுக்கு என்னை முதலில் அடையாளம் தெரியா விட்டாலும் பின்னர் கண்டுகொண்டால்



 பதற்றத்துடன் அவள்  நிற்க அதை பெரிதாக கண்டு கொள்ளாத நான் அவள் அருகில் சென்று சாமி கும்பிட்டு விட்டு அவள் முன்னாடியே என் புருஷனை என்னங்க அங்க என்ன இவ்வளவு நேரம் இங்க வந்து இந்த குங்குமத்தை வச்சு விடுங்க அப்படின்னு கூப்பிட அவ என்ன ஆச்சரியமா பார்த்தா என் கணவர் ரமேஷ் அங்க வந்து அவளை கண்டுக்காமல் எனக்கு குங்குமத்தை வைத்துவிட்டார். எங்கேங்க போனீங்க இவ்ளோ நேரம் அப்படி நான் கேட்டு செல்லமாக கோவமபட என் பொண்டாட்டிக்கு ரொம்ப பிடிக்கும் என்று பூ வாங்க போயிருந்தேன்னு அப்படின்னு சொல்ல, என்னங்க மல்லிகை மட்டும் தான் இருந்ததா கனகாம்பரம் பூ நா எனக்கு ரொம்ப புடிக்கும்ல ஏன் வாங்கள  அப்படீன்னு கேட்க அது கிடைக்கல டீ பொண்டாட்டி சரி ரோஜா வாங்களாம்னு பார்த்தேன் அதான் ரோஜா மாதிரி இருக்கியே அப்டின்னு சொல்ல இப்படி பேசியே மயக்கிடுங்க அப்படின்னு வெட்கத்தோட சொல்லி வச்சு விடுங்க அப்படின்னு திரும்பி நிக்க , என்னுடைய முன்னாள் மனைவி அஞ்சலி முன்னாடியே என்னுடைய கணவர் ரமேஷ் என் தலையில் பூ வச்சு விட்டார் பின்பு கும்குமம் வைத்து விட்டார். பிறகு நான் என் தாலியில் கும்குமாம் வைக்க. என் பெண்மை நிறந்த செயல்களை அஞ்சலி வியந்து பார்த்துக் கொண்டுருந்தால். நாங்கள் இருவரும் கோவிலை சுற்றும் போது அஞ்சலி என்னை பார்த்து ஒரு நிமிடம் என்று அழைத்தால் என்ன வேணும் சொல்லுங்க அப்படின்னு கேட்க என்னால நம்பவே முடியல நீங்களா இது நிஜ பொம்பளையாவே மாறி கல்யாணம் எல்லாம் பண்ணி ஒரு ஆம்பளை கிட்ட நீங்க பொண்டாட்டி மாதிரி பேசறது சினுங்குறதும் பாக்கவே என்ன சொல்றதுன்னு தெரியல அப்படின்னு சொல்ல. 

ஹலோ என் புருஷன் கூட நான் எப்படி வேன்னா இருப்பேன் நீங்க யாரு அத பத்தி பேச அப்டின்னு கேட்டடேன். உடனே அவ ஆனா ஒன்னு மட்டும் கேட்டுக்க விரும்புறேன் உங்க வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நான் தான் காரணம் அப்படின்னு சொல்லி மன்னிப்பு கேட்க .நான் உடனே அதெல்லாம் வேணாம் அஞ்சலி நீ அப்படி பண்ணதனால எனக்கு எந்த கெடுதலும் இல்லை எனக்குள்ள இருக்க பெண்மையை நான் உணர்ந்துட்டேன் என்ன அன்பா பார்த்துக்கிற ஒரு புருஷன் எனக்கு கிடைச்சிருக்காரு சொல்லப்போனால் இந்த வாழ்க்கையே நீ கொடுத்தது அப்படின்னு சொல்ல அவ உடனே குழந்தை எங்கன்னு கேட்க அது எதுக்கு உனக்கு அவ எனக்கும் என் புருஷனுக்கும் பிறந்த குழந்தை மழை அதிகமா இருக்கேன்னு நான் தான் அவங்க அம்மாச்சி வீட்ல விட்டுட்டு வந்தேன் அப்படின்னு சொன்னேன். முன்ன விட கொஞ்சம் எடை அதிகமா இருப்பீங்க போல அப்படின்னு அவ கேட்க, நான்  பத்து மாசம் சுமந்து புள்ள பெத்தவளுக்கு தான் தெரியும் அதெல்லாம் உனக்கு புரியாது அப்படின்னா அவ மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு என் புருஷன் கூட கைகோர்த்து அவன் முன்னாடி தலை நிமிர்ந்து நடந்தேன் அவர் தலை குனிந்து நின்றாள். இப்படியே நான் என் குழந்தை என் கணவர் என்று வாழ்க்கை சென்றது 



இதோ என் தங்கை கல்யாணம் பெண்களில் ஒருத்தியாக நான் இன்று மகிழ்ந்து இருக்கிறேன். 




நன்றி......

Comments

Iron man said…
Lovely 🥰🥰🥰🥰🥰😍😍😍😘
Anonymous said…
PLEASE WRITE ON ENGLISH OR TELUGU
Anonymous said…
Story beautiful... 💕
Anonymous said…
Dear Anandhi, pls write Tamil words in English alphabets. I can understand Tamil, can't read Tamil letters. Please you write sensible stories and I don't want to miss them. Using translators is running the reading experience.
You don't have to write in English language. But try to type Tamil in English alphabets in that way, it will be beneficial for many, the story will be in Tamil and also can be understandable by others. Please
Anonymous said…
Romba azhagana writeup. Really loved the kovil part especially kungumam vachu vidradhu
Anonymous said…
Nice story. Rajesh ya vada poda nu solla, pinnar avar ivaru nu solla. Story play was fantastic. Each and every character role was fantastic. Post more stories in Tamil. We are waiting for your stories.
Anandhi said…
This comment has been removed by the author.
Anandhi said…
😍😍❤️❤️
Anandhi said…
Sure I will try ☺️
Anandhi said…
Thank you pa ☺️❤️
Anandhi said…
Hey thank you ❤️
Anandhi said…
Thanks 😍💖

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...