இப்போ முன்ன மாதிரி எல்லாம் பேண்ட் சட் போட முடியல என்னுடைய இடுப்பு அளவு முன்பை விட கொஞ்சம் பெரிதாகி விட்டது அதனால் என்னுடைய நைட் டிரஸ் அல்லது லூசான அப்பாவுடைய டீசர்ட்டுகளை மட்டும் போடத் தொடங்கினேன். வீட்ல எல்லாரும் என்ன ஸ்பெஷலா பார்க்க தொடங்கினாங்க குறிப்பா என் மனைவி வீட்ல நான் எந்த இடத்துக்கு போனாலும் என் பக்கத்துல வந்து என் தோள் மேல கைய போட்டு கூட்டிட்டு போனா எனக்கு அது ஒரு விதமான உணர்வை கொடுத்தது. வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடித்தது. என் மனைவியும் அம்மாவும் அடிக்கடி மாசமா இருக்கிறது பத்தியே பேசிட்டு இருந்தாங்க மாசமா இருக்கவங்க எப்படி எல்லாம் நடந்துக்கணும் தன் உடம்ப எப்படி பாத்துக்கணும்னு பாடம் எடுத்துட்டு இருந்தாங்க. ஆரம்பத்துல போர் அடிச்சாலும் போகப் போக நானும் என்னோட நல்லதுக்கு தானே சொல்றாங்க இப்போ இருக்க நிலைமைக்கு எனக்கும் தேவைப்படும் அப்படின்னு அவங்க சொல்வதை எல்லாம் கேட்க ஆரம்பித்தேன். தினமும் அம்மாவோ அல்லது மனைவியும் எனக்கு தலை வாரி கொண்டையோ அல்லது போனி டெயிலோ போட்டு விடுவாங்க. ஒரு நாள் குளித்துவிட்டு வந்து கண்ணாடியில் என்னை பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடைய மார்பு பகுதி சற்று வீக்கமாக இருப்பதை உணர்ந்தேன் தயக்கத்தோடு என் அம்மாவை அழைத்து கூறினேன் அவங்க டேய் எங்க காட்டு அப்படின்னு சொல்ல நான் தயக்கத்தோடு டீ சட்டை தூக்கி காட்ட அவங்க பார்த்து சிரித்தார்கள் இது சாதாரணமா மாசமா இருக்கப்ப எல்லா பொம்பளைங்களுக்கும் நடக்கிறது தான் அப்படின்னு சொல்லி சிரிக்க என்ன பொம்பளைன்னு சொல்லி எங்க அம்மா சொன்னதும் எனக்கு கோபம் வந்தது ஆனால் நான் வெளியே காட்டிக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு நான் என் மனைவி இருவரும் டாக்டரை பார்க்க போனோம் செக்கப் முடிஞ்சு குழந்தை நல்லா ஹெல்த்தியா தான் இருக்கு நல்ல மெயின்டைன் பண்ணுங்க அப்படின்னு சொல்லி சில மருந்துகளையும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க. ஒரு நாள் அம்மா கிட்ட பொய் சொன்னேன் அம்மா என்னோட துணி எல்லாம் போடவே முடியல ரொம்ப டைட்டா இருக்குமா புது துணி எடுக்கலாம் அப்படின்னு சொல்ல அப்படியா இரு வரேன் அப்படின்னு சொல்லி அம்மா என் மனைவியை அழைத்து அஞ்சலி தினேஷுக்கு அந்த பீரோல இருக்கிற நைட்டியை எடுத்துட்டு வா அப்படின்னு சொல்ல நான் அதிர்ச்சி அடைந்தேன் எது நைட்டியா லூசு மாதிரி பண்ணாத மா அப்படின்னு சொல்ல, அம்மா என்னை வற்புறுத்த நானும் முடியவே முடியாது என்று அடம் பிடிக்க பிறகு அம்மா உடனே டேய் மாசமா இருக்கிற ஆம்பளைக்குன்னு புதுசா துணி எதுவும் உலகத்துல கண்டுபிடிக்கலடா பேசாம இதையே போடு அப்படின்னு சொல்லி கொடுக்க நான் சங்கடமாக தலை குனிந்து வாங்கிக் கொண்டேன். ரூம்குள்ள போயி நைட்டி போட்டு பின்னாடி ஜிப் போட முடியாமல் கஷ்டப்பட்டப்போ என் அம்மா உள்ளே வந்தாங்க என்னை பார்த்ததும் திரும்பி அப்படின்னு சொல்லி நைட்டியை கழட்ட சொன்னாங்க நானும் கழட்ட என்னை பார்த்து அம்மா அஞ்சலியை கூப்பிட்டு ஏதோ சொன்னாங்க உடனே அஞ்சலி சென்று வெள்ளை கலர் பிரா ஒன்று எடுத்து வந்தால் அதை பார்த்ததும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது அம்மா எதுக்கும் இதெல்லாம் அப்படின்னு கேட்க டேய் உன்னுடைய மார்பகங்கள் ரொம்ப பெருசா வளர்ந்துகிட்டே வருதுடா பிரா போடாம நீ எந்த உடை உடுத்தினாலும் பார்க்க ரொம்பவே அசிங்கமா இருக்கும் அது மட்டும் இல்லாம நீ நடக்கும்போதும் தூங்கும் போது உனக்கே அசவுகரியமா இருக்கும் அப்படின்னு சொல்லி பிராவை போட்டுவிட்டு பிறகு நைட்டியை போட்டு விட்டாங்க.
பிறகு அம்மா ரூமில் இருந்து வெளியே செல்ல மனைவி என்னை பார்த்து சிரித்தாள் நானும் வெட்கப்பட்டேன் பிறகு அவள் என்னை அமர வைத்து என் அருகில் உட்கார்ந்து இடுப்பில் கை வைத்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் அப்படின்னு கேட்க நானும் இப்படி அப்படின்னு நிறைய பேர்களை சொல்லி ரெண்டு பேரும் பேசி சிரிச்சு கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருக்கும் போதே என் மனைவி ஒரு நிமிஷம் இருங்க அப்படின்னு சொல்லி தேங்காய் எண்ணெய் மற்றும் சீப்பு கொண்டு வந்து என் தலை முடிக்கு தேய்த்து தலையை சீவி கொண்டை போட்டு விட்டாள். அன்றைய இரவு அப்படியே சென்றது.
தொடரும்......
Comments