என்னோட பேரு தினேஷ்
அப்பா : ரவி அவர் ஒரு பெரிய பிசினஸ்மேன்.
அம்மா : ஜானகி ஹவுஸ் வைஃப்.
தங்கச்சி : அர்ச்சனா கல்லூரி படிக்கிறாள்.
நானும் அப்பாவுடைய பிசினஸய்தான் பார்க்கிறேன். எனக்கு திருமணம் ஆகிவிட்டது மனைவி பெயர் அஞ்சலி ரொம்ப அழகா இருப்பா. எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது இப்பொழுது என் மனைவி கர்ப்பமா இருக்கா நாங்க எல்லோரும் வீட்டில் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். நானும் அப்பாவாக போறது நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு நாள் நானும் என் மனைவியும் எங்கள் உறவினர் திருமணத்திற்கு சென்று வரும்போது எதிர்பாராமல் விபத்து ஒன்று நடந்து விட்டது. கண் விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் இருந்தேன் அம்மா மற்றும் தங்கை இருந்தார்கள் என் மனைவி எப்படி இருக்கான்னு கேட்டேன் அவளுக்கு ஒன்னும் இல்லடா நல்லாத்தான் இருக்கா அப்படின்னு சொன்னாங்க குழந்தைக்கு என்ன ஆச்சு? இல்ல அண்ணா விபத்துல அண்ணிக்கு கரு கலஞ்சுருச்சு அது மட்டும் இல்லாம இனிமே அன்னியால் கருவா சுமக்கவே முடியாது என்று டாக்டர் சொல்லிட்டாங்க அப்படின்னு சொன்னா நான் அதிர்ந்து போய் இருந்தேன் அழுகையை அடக்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. பிறகு ஒரு வாரம் ட்ரீட்மென்ட் அப்புறம் வீட்டுக்கு போனோம் என் மனைவி ரொம்பவே பலவீனமாக இருந்தா நானும் எழுந்து பெரிதாக நடக்க கூட முடியாத நிலையில் தான் வீட்டில் படுத்து இருந்தேன். அப்படியே நாட்கள் கடக்க மூன்று மாதங்கள் ஆனது என்னால் வெளியே எங்கும் போக முடியாதாள் என்னுடைய தாடி மற்றும் தலை முடி என்னுடைய முதுகு வரை வளர்ந்து இருந்தது. என்னுடைய அம்மா மற்றும் தங்கை தான் எனக்கு உணவு கொண்டு வருவது ஊட்டி விடுவது என்று எல்லாம் செய்தார்கள் ஒரு தடவை உணவு ஊட்டி விடும்போது அம்மா டேய் ஏண்டா இப்படி காட்டுவாசி மாதிரி இவ்வளவு மீசை தாடியோட இருக்க உன் தாடிக்குள்ள உன் வாய் எங்க இருக்குன்னு தேடி சாப்பாடு ஊட்டுவதற்கே கஷ்டமா இருக்கு முதல்ல கிளீன் ஷேவ் பண்ணு அப்படின்னு சொல்லவும் அப்பா வந்து கவலைப்படாதடா நான் உனக்கு பண்ணி விடுறேன் அப்படின்னு சொல்லி கிளீன் ஷேவ் பண்ணி விட்டாங்க. என்னுடைய தங்கையும் முடியை இப்படி பொம்பளைங்க மாதிரி வளர்த்து வச்சிருக்கியே கொண்ட அல்லது போனி டெயில் போடுடா அப்பதான் உனக்கு தொல்லை இல்லாம இருக்குன்னு சொல்லி என் தலையை வாரி போனி டெயில் போட்டு விட்டா. ஆனா இந்த மூன்று நான்கு மாத காலமாக என்னுடைய மனைவி என்கிட்ட சரியா பேசவே இல்லை. நான் இருக்க ரூமுக்கு கூட பெருசா வர மாட்டா அப்படியே நாட்கள் சொல்ல கொஞ்சம் கொஞ்சமா நான் எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சேன் அப்ப என்னுடைய மனைவியை தனியா பார்த்து உனக்கு என்னதான் பிரச்சனை குழந்தை போனதில் எனக்கு மட்டும் சோகம் இல்லையா ஏன் என்கிட்ட பேசாம எண்ண இப்படி சித்திரவதை பண்ற என்று கேட்டதற்கு அவ அழுதுகிட்டே சொன்னா. குழந்தை போனதை விட இனிமே என்னால குழந்தையை சுமக்கவே முடியாதுன்னு சொன்னது தாங்க என்னால தாங்க முடியல உங்களுக்கு ஒரு வாரிசு கொடுக்க முடியலையேன்னு உங்க முகத்தில் முழிக்கவே எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு அப்படின்னு சொல்லி அழுதா நான் உடனே இதுதான் உன்னுடைய பிரச்சனையா காலம் எவ்வளவோ மாறிக்கிட்டு இருக்கு எத்தனையோ டாக்டர் வந்துட்டாங்க வா பார்க்கலாம் அப்படின்னு சொல்லி அவளை கூட்டிட்டு போனேன் பல டாக்டர்களை பார்த்தோம் எல்லா டாக்டரும் சொன்ன ஒரே பதில் உங்க மனைவிக்கு கர்ப்பப்பை மட்டும் இல்லை உடலளவில் ரொம்பவே வீக்கா இருக்கிறாங்க அவங்க குழந்தையை சுமந்தா ஒரு ஐந்து ஆறு மாத காலங்கள் மட்டுமே சுமக்க முடியும் அதுக்கு மேல இருந்தாங்கன்னா அது அவங்க உயிருக்கும் ஆபத்து குழந்தையோட உயிருக்கும் ஆபத்து அப்படின்னு சொன்னாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். கடைசியில என்னுடைய நண்பன் ரமேஷ் அவனும் ஒரு மருத்துவர் அவனைப் பார்த்தப்ப என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதை சொன்னா நீ செய்வியானு கேட்டான் எதுவா இருந்தாலும் சொல்லுடா நான் பண்றேன்னு சொன்னேன் உடனே இப்ப இருக்க டெக்னாலஜியில பெண்கள் மட்டும் இல்லடா ஆண்கள் கூட கருவ சுமக்க முடியும் உனக்கும் உன் மனைவிக்கும் உன் வீட்ல இருக்கவங்களுக்கும் ஓகேன்னா உன்னோட விந்தணுவை வைத்து வாடகை தாய் மாதிரி உனக்குள்ளேயே கருப்பையை உண்டாக்கி கருவ சுமக்க வைக்க முடியும் அப்படின்னு சொல்ல நான் ஆச்சரியத்துடன் டேய் என்னடா சொல்ற இதெல்லாம் நடக்கிற கதையா? அப்படி சுமக்க வைக்க முடியும்னா நான் இன்னொரு வாடகை தாயின் மூலமாக பெத்துக்கலாமே எதுக்கு அதை ஏன் உடம்புல சுமக்கணும் அப்படின்னு கேட்க வாடகை தாய் மூலமாக குழந்தை பெத்துக்கிட்டேனா என்னைக்கா இருந்தாலும் அந்த குழந்தைக்கு சொந்த அம்மாவுடைய உடல் மொழிகளும் தோற்றங்களும் வரத்துக்கு வாய்ப்பு இருக்கு அந்த அம்மாவுக்கும் தான் சுமந்த குழந்தைகளே என்னைக்கா இருந்தாலும் தன்னோட புள்ளைங்க அப்படின்னு சொல்லத்தான் தோணும் அதனால நீயே சுமப்பது தான் சரி அப்படின்னு சொன்னான் . இதெல்லாம் நடக்குமாடா என்று கேட்டேன் நடக்கும்டா என்ன நம்பு அப்படின்னு சொல்ல எனக்கும் என் மனைவிக்கும் ஒரு வாரிசு வேணும் அப்படிங்கற எண்ணம் என் மனதுக்குள்ள ஓடிக்கொண்டே இருந்ததால் இதை நான் ஒப்புக்கொண்டேன். என் மனைவி மற்றும் குடும்பத்தினர் பல யோசனைகளுக்கு பிறகு ஒப்பு கொண்டார்கள் ஒரு வாரம் கழித்து பலவித பரிசோதனைக்கு பிறகு என் உடம்பில் கர்ப்பப்பை இணைக்கப்பட்டு என்னுடைய விந்தணு செலுத்தப்பட்டு விட்டது. பிறகு மூன்று மாத காலம் சகஜமாக வீட்டில் இருந்த நான் ஒரு நாள் தலை சுற்றுவது போல் வாந்தி மயக்கம் வந்தது நான் வாந்தி எடுத்து மயக்கம் அடைவது பார்த்த தங்கையும் மனைவியும் பதறிப் போக அம்மா மட்டும்தான் பார்த்து சிரிச்சாங்க என்னம்மா எனக்கு ஓடம்பு சரியில்ல அத பார்த்து ஏன் சிரிக்கிறீங்கன்னு சுயநினைவு இல்லாமல் கேட்க ஒன்னும் இல்லடா எனக்கு பேரணனோ பேத்தியோ பொறக்க போறா உன் வாரிசு உன் வயித்துல வளர ஆரம்பித்துவிட்டது அப்படின்னு சொன்னாங்க எனக்கு ஒரு புதுவிதமான வெட்கம் கலந்த மகிழ்ச்சி நான் மௌனமா சிரிக்க என் மனைவியும் தங்கையும் சத்தம் போட்டு சிரிச்சாங்க பின்வரும் நாட்களில் என்ன நடந்தது என்பதை அடுத்த அடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
தொடரும்......
Comments