மதன் டிவி பார்த்துக் கொண்டு இருந்தான் அப்போது அவன் அம்மா போனிஸ் தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார் மதனுடைய அம்மா கலா ஒரு டைலர். மதன் தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான். தினமும் அவன் அம்மா தனது தோழிகளிடமும் மற்ற பெண்களிடமும் பிளவுஸ்,புடவை,பாவாடை தாவணி, நகைகள் பற்றி பேசுவதை டிவி பார்த்துக் கொண்டே இதையும் கேட்கிறான். அப்படியே மதன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருக்க அங்கே வந்த கலா என்னடா ஏதோ ரொம்ப தீவிரமா எதையோ யோசிச்சிட்டு இருக்க அப்படின்னு கேட்க, நிதானத்தில் இல்லாத மதன் அது ஒன்னும் இல்லம்மா நான் ஒரு தடவை புடவை கட்டி பார்த்தா எப்படி இருக்கும் யோசிச்சேன் அப்படின்னு தன்னை அறியாமல் சொல்லிட்டான். என்னடா சொல்ற அப்படின்னு கலா வியந்து போய் கேட்க. தான் என்ன சொன்னேன் என்பதை அறிந்த மதன் அது ஒன்னும் இல்லம்மா வேற ஏதோ நினைச்சுட்டு இருந்தேன் சரி விடுங்க அதை பத்தி பேசாதீங்க அப்படின்னு பேச்சை மாத்த ஆனால் கலா அவனை விடுவதாக இல்லை டேய் கூச்சப்படாமல் சொல்லுடா நீ என்ன சொன்ன என்பதை மறுபடியும் ஒரு தடவை என்கிட்ட சொல்லு ப்ளீஸ் அப்படின்னு கேட்க. கூச்சத்துடன் அது ஒன்னும் இல்லமா நான் நீங்க போன்ல பேசும்போதும் நம்ம வீட்டுக்கு கஸ்டமர் வரும்போதும் ஏன் சினிமால டிவி சீரியல் கூட நிறைய பெண்கள் சொல்லி கேட்டு இருக்கேன் புடவை கட்டுறது புடவை கட்டிட்டு அன்றாட வேலைகளை செய்றது ரொம்ப கஷ்டம் ஆனால் புடவை கட்டுகிறது தான் உலகத்திலேயே அழகான விஷயம் வாழ்க்கையில ஒரு தடவையாவது புடவை கட்டி பாத்தா தான் அதோட அருமை புரியும் அப்படி இப்படின்னு நிறைய பேர் பேசுவதை கேட்டு இருக்கேன். அதனால தான் சரி ஒரு தடவை அந்த உணர்வு எப்படி தான் இருக்கும் தெரிஞ்சுக்கலாம்னு புடவை கட்டி பார்க்கலாம் தோணுச்சு அப்படின்னு சொன்னான். கலா மதனை ஆச்சரியமா பார்த்தா உடனே மதன் ஐயையோ ரொம்ப ஓவரா பேசிட்டோமோ அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சுட்டு சரிமா எனக்கு தூக்கம் வருது நான் போறேன் அப்படின்னு எந்திரிச்சு போக அவன் கையைப் பிடிச்சு டேய் மதன் நில்லுடா இங்க வா உட்காரு உனக்கு புடவை கட்டிக்க ஆசனா நானே உனக்கு உதவி பண்றேன். இன்னும் ஒரு வாரத்துல உனக்கு பிறந்தநாள் வருதுல்ல அன்னைக்கு நீ புடவை தான் கட்டி இருப்ப ஓகேவா? மதன் புடவை கட்டி பாக்கணும்னு ஆசைப்பட்டது என்னமோ உண்மைதான் ஆனால் நான் புடவையில் எப்படி இருப்பேன் என்று இதுவரை நினைத்து கூட பார்த்ததில்லையே அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு ஒருவித பதட்ட உணர்வோட தென்பட்டத பார்த்த கலா டேய் பதட்டப்படாதடா அம்மா உனக்கு தேவையான புடவையும் நகைகளையும் வாங்கிறேன் அப்படின்னு சொன்னத கேட்டு மதன் என்ன நகைகளுமா எனக்கு அதெல்லாம் வேணாம் நான் புடவை மட்டும் தான் ஒரு தடவை கண்டிப்பாக்க ஆசைப்பட்டேன் அப்படின்னு சொல்ல டேய் புடவை கட்டிக்க மட்டும் ஆசைப்பட்டுட்டா போதாது, அதற்கு ஏத்த மாதிரி தோடு, கொலுசு, வளையல், நெக்லஸ் எல்லாம் போட்டா தான் டா உன்னுடைய லுக் நல்லா இருக்கும். ஆனா ஒரு விஷயம் நல்ல விஷயம் தான் காலேஜ் முடிச்சு ரெண்டு வருஷம் வேலைக்கு போகல நாளும் தலை முடியை மட்டும் பொம்பளைங்க மாதிரி இடுப்பு வற வளர்த்து வச்சிருக்க அதனால உன் தலை அலங்காரத்தில் பிரச்சனை இல்லை அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கு வெட்கம் கலந்த பயம் அதிகமாயிடுச்சு. அய்யய்யோ அம்மா ரொம்ப எல்லை மீறி போறாங்களே எப்படியாவது வேண்டாம் என்று சொல்லி இதை நிறுத்திடுவோம்னு மதன் முயற்சி செய்தும் கலா கேட்கிற மாதிரி இல்லை வேற வழியில்லாமல் மதன் இத ஒத்துக்கிட்டான்.
தொடரும்.......
Comments