போற வழியிலேயே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல புக் பண்ணி இருந்ததால என்னுடைய பெட்டிக்குள்ளேயே புடவையை மாத்திட்டு பேண்ட் சட்டையை போட்டுட்டு. கண்ணாடி முன்னாடி போய் மூஞ்சி கழுவிட்டு பொட்டை எடுத்துட்டு பூவை எடுக்க போகும் போது எங்க அண்ணன் ஞாபகம் வந்துச்சு அதனால சரி விடு போ தானே எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லி பூவை மட்டும் தலைல வச்சுக்கிட்டு தூங்கிட்டேன் காலையில எழுந்து பூவ எடுத்து டஸ்பின்ல போட்டு ஜடையை பிரித்துவிட்டு போனிடெயில் போட்டு ஆபீஸ்க்கு போயிட்டேன்
அங்க போய் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிட்டு திங்கட்கிழமை வந்து வேலையில சேர்ந்துக்க சொல்ல நானும் சரி அப்படின்னு சொல்லி சனி ஞாயிறு இரண்டு நாள் லீவுல நான் தங்குவதற்கு வீடு தேட ஆரம்பிச்சேன். ஒரு மாதம் ஆபீஸ் போக பிறகு ஒர்க் ப்ரம் ஹோம் கொடுத்ததனால நான் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட்லயே இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சேன். அப்பொழுது வீட்டிலிருந்து போன் வந்தது பேசிக் கொண்டிருந்தேன் அப்பொழுதுதான் அம்மா சொன்னாங்க உங்க அண்ணி மாசமா இருக்கா அப்படின்னு எனக்கு ரொம்ப சந்தோஷம் நான் சித்தப்பா வாக போறேன்னு உடனே அண்ணி அம்மா கிட்ட இருந்து போன வாங்கி ஹே ரம்யா எப்பிடி இருக்க நீ அத்தை ஆக போற அப்படின்னு சொல்லி கிண்டல் பண்ண நானும் பதிலுக்கு அப்படியா சரி எனக்கு மருமகளா இல்ல மருமகன பெத்து கொடுக்க போறியா அப்படின்னு கேட்க ஒரே சிரிப்பா இருந்தது. வீட்டிலேயே தனியாக வேலை செய்யும்போது ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சது நான் ஒர்க் பண்ணும் போதெல்லாம் என் காலில் கொலுசு என் கையில வளையல் காதுல தோடு இதெல்லாம் இல்லாதது ஏதோ வித்தியாசமா ஒரு உணர்வா இருந்துச்சு. சாயந்தரம் வேலைய முடிச்சுட்டு போய் குளிச்சிட்டு வந்து என் பேக்கை திறந்து துணி எடுக்கும் போது அதுல என்னோட புடவையை பார்த்தேன் எடுத்து கட்டிக்கலாமா அப்படின்னு ஒரு எண்ணம் உடனே ஒரு ப்ளூ கலர் புடவையை எடுத்து என் தோள்பட்டைள போட்டு கண்ணாடி முன்னாடி போய் பார்த்தேன் ரொம்ப அழகா இருந்துச்சு அப்புறம் மனசுக்குள்ள ஏதோ ஒரு எண்ணம் டேய் ரமேஷ் நீ ஒன்னும் பொம்பளை இல்லடா நீ பையன் நீ ஏன் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிற அப்படின்னு தோணவும் மறுபடியும் புடவை எடுத்து திரும்ப வச்சுட்டேன். அப்புறம் பேண்ட் ஷர்ட் போட்டு முகம் கழுவிட்டு கண்ணாடில போய் பாக்குறப்போ சரி வேற எதுவும் பண்ண வேணாம் தல முடிய வேணா ஜடை பின்னி போட்டுப்போம் இதில் என்ன இருக்கு அப்படின்னு சொல்லி ஜடை பின்ன போன அப்பொழுது அம்மா எனக்கு முதல் முதல்ல ஜடை பின்ன நியாபகம் வந்ததனால நடுவகுடு எடுத்து எம் முடிய ரெண்டு பக்கமா பிரிச்சு ரெட்டை ஜடை பின்னிக்கொண்டு சாமி ரூமுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு எனக்கு சின்ன வயசுல இருந்து ஏனோ திருநீர் வைக்கிறது பிடிக்காது அதனால குங்குமத்தை எடுத்து என் நெத்தியில வச்சுக்கிட்டு போய் கண்ணாடியை பார்த்தேன் ரெட்டை ஜடை பின்னி குங்குமம் வச்சி ரொம்ப அழகாவே இருந்தேன் அப்புறம் அப்படியே போய் தூங்கிட்டேன். ஒரு நாள் ஏன் வீட்டுக்கு எதிர் வீட்ல என்ன மாதிரியே ஊர்ல இருந்து வந்து இங்க வேலை செய்ற பிரியா என்கிற ஒரு பொண்ண பார்த்தேன் அவள பாத்தது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. பிரியா மேல எனக்கு காதல் வர ஆரம்பிச்சிருச்சு எனக்கு முடி நீளமா இருக்கத நான் அவ கிட்ட காட்டிக்கல இரண்டு பேரும் பேசி பழக ஆரம்பிச்சோம் அப்போ எல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பா எதுக்கு எப்ப பார்த்தாலும் தலையில தொப்பி போட்டு சுத்துறன்னு நான் அவ கிட்ட ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லி வேற ஏதாவது பேச ஆரம்பிச்சிடுவேன் ஆனா டெய்லி நைட் நான் தூங்கும்போது ஜடை பின்னிட்டு தான் தூங்குவேன்.
Comments