அப்படியே நாட்கள் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு வீட்டில ரொம்ப போர் அடிக்கும் அம்மாவுக்கும் அ ண்ணிக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் கொஞ்சமா உதவி செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்துல பாவாடை தாவணி கட்டிக்கிட்டு வீட்டு வேலைகளை செய்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் போகப்போக பாவாடை தாவணி கட்டி வீட்டு வேலை செய்றது கொஞ்சம் கம்ஃபோட்டபிலா இருந்துச்சு.
ஒரு நாள் அம்மா அப்பா அண்ணன் மூணு பேரும் ஊருக்கு போக நானும் திவ்யா அண்ணி மட்டும் வீட்ல இருந்தோம் ரொம்ப போர் அடிக்குது என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னு அண்ணி கிட்ட சொன்னேன் உடனே அண்ணி அப்போ ஒன்னு பண்ணலாம் வா இன்னைக்கு உனக்கு புடவை கட்டி பார்த்தரலாம் அப்படின்னு சொல்ல ஐயோ அண்ணி அதெல்லாம் வேணாம் அதுக்கு நான் சும்மாவே இருந்துருவேன் அப்படின்னு சொன்னேன். டேய் பாவாடை தாவணி எல்லாம் கட்டிட்ட அதுக்கு மேல என்ன கூச்சப்படுவதற்கு அதுவும் அம்மா வேற வீட்ல இல்ல இப்ப புடவை கட்டுவதால் என்ன கெட்டுப் போயிட போகுது இப்போல இருந்து புடவை கட்டி பழகுனாத்தான் நாளைக்கு ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தினால் நீ வெளியே போவது நாளும் உனக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கும் வா அப்படின்னு என்னை இழுத்துட்டு போய் என் பாவாடை தாவணி கழட்டி விட்டு உள்பாவாட பிரா என்னுடைய மார்பை எடுப்பா காட்டுற மாதிரி பிளவுஸ் எல்லாம் போட்டுவிட்டு எனக்கு புடவை கட்டிவிட ஆரம்பிச்சாங்க. கட்டி விட்டுட்டு எப்படி கட்டணும் எப்படி மடிப்பு எடுக்கணும் எல்லாம் சொல்லிக் கொடுத்து ஒரு வழியா அழகா கட்டி முடிச்சிட்டாங்க.
எனக்கு ரொம்ப வித்தியாசமான வெட்கம் கலந்த ஒரு உணர்வு அப்படியே என்னை இழுத்துட்டு போய் கண்ணாடி முன்னாடி உட்கார வைத்து எனக்கு தலை சீவி ஜடை பின்ன ஆரம்பிச்சு எனக்கு சொல்லிக் கொடுத்துட்டே பிண்ணி விட்டாங்க. நானும் எப்படி ஜடை பின்னுவது என்று எங்க அண்ணிக்கு தலையை சீவி பின்னி விட்டு கத்துக்கிட்டேன் எங்க அண்ணியும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டயே டா அப்படின்னு சொல்லி. அப்படியா இன்னைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து விட்டு டிவி சீரியல் பார்த்துக் கொண்டு அதுல வர நடிகைகள் அவங்க புடவைங்க தோடு நெக்லன்னு காட்டி காட்டி இந்த தோடு இந்த புடவைக்கு நல்லா இருக்கும் இந்த புடவை கட்டுனா இந்த மாதிரி மேட்சிங் வளையல் போட்டா சூப்பரா இருக்கும். ஹே ரம்யா அந்த ஹீல்ஸ்க்கு அவ கொலுசு மேட்சே ஆகல இல்ல அப்படின்னு கேட்க நானும் ஆமா அண்ணி கொலுசு போடுறப்ப ஹீல் இல்லாத செப்பல் போட்டா தான் நல்லா இருக்கும் அப்படின்னு சொல்ல அப்புறம் அண்ணி இந்த மாமியார் காரி எப்பவுமே இப்படிதாண்டி மருமகள போட்டு கொடுமைப்படுத்திக்கிட்டே இருப்பா அப்படின்னு சொல்ல நானும் ஆமா அண்ணி நானும் இந்த சீரியல் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன் ரொம்ப மோசமான மாமியார் தான் அவங்க, அன்னைக்கு கூட பாருங்க சமைச்சுகிட்டு இருக்கப்ப அவ புருஷன் கூப்பிடுவான் அதனால அடுப்ப சிம்ல வச்சுட்டு போயிருப்பா புருஷன் வேலைக்கு கிளம்புறதுனால அவர போய் வழியனுப்ப தான் போவா அதுக்குள்ள அவன் புருஷன்தான் அவளை பிரிய முடியாம அவளை கிஸ் பண்ணி கொஞ்சம் லேட் ஆக்கிடுவான் அதுக்கப்புறம் அவ புருஷன் போனதுக்கப்புறம் அடுப்படிக்கு வந்து பாப்பா பால் பொங்கி இருக்கும் அதுக்கு அவங்க மாமியா அவ்வளவு திட்டு திட்டுவா எனக்கே பாக்க கடுப்பாயிடுச்சு அப்படின்னு நான் சொல்ல. ஆமா ரம்யா நல்ல வேலை எனக்கு அப்படி ஒரு மாமியார் கிடைக்கல அப்படின்னு அண்ணி சொல்ல, ஆமா அண்ணி எங்க அம்மா ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்ல உடனே அண்ணி கவலைப்படாதடி நாளைக்கு உனக்கும் என்ன மாதிரி மாமியார் கிடைபாங்க நீ சமைக்கும் போது உன் புருஷனுக்கு முத்தம் என்ன மொத்தத்தையும் கொடுத்தா கூட உன்னை திட்டாத மாமியாரா தான் உனக்கு கிடைப்பாங்க கவலைப்படாதே அப்படின்னு சொல்லி சிரிக்க எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது விளையாடாதீங்க அப்படின்னு சொல்ல காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது அண்ணி போய் கதவை திறக்க அம்மா அண்ணன் அப்பா எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க என்ன முதல் முறையா புடவையில் பார்த்த அம்மாக்கு அவ்வளவு சந்தோஷம் ஐயோ என் தங்க குட்டி எவ்வளவு அழகா இருக்கா புடவைல அப்படின்னு சொல்லி செல்லம் என் பட்டு ன்னு சொல்லி கொஞ்சி கொஞ்சி கொஞ்சி விட்டாங்க அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சந்தோஷம்தான்.
Comments