அப்படியே ஒரு வாரம் சென்றது நானும் பிரியா உடன் பேசவில்லை அவளும் என்னுடன் பேசவில்லை ஒரு நாள் நான் அன்னிக்கு போன் பண்ணேன் நடந்ததெல்லாம் சொன்னேன் அப்போ அண்ணி டேய் உன்ன மாதிரி பொண்ணு மாதிரி இருக்க பையனுக்கு பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். அது மட்டும் இல்லாம நீயே சொல்லு பொம்பளைங்க மாதிரி முடி வளர்த்து புடவை கட்டி விதவிதமா பூ வச்சு அழகு பார்க்கிற ஆம்பளைய எந்த பொண்ணாச்சும் லவ் பண்ணுவாளா ஆனா பிரியா அதெல்லாம் தெரிஞ்சும் உன் மேல உயிரையே வைத்திருந்தா அவளே உனக்கு புடவை வாங்கி கொடுத்து கட்ட சொல்லி அழகு பார்த்தா அப்பேர்ப்பட்ட பொண்ணு விட்டுடாதடா இங்க பாரு ப்ரியா தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும் புரியுதா அப்படின்னு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க.
அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு துணி மாற்றுவதற்கு என் பேக்கை எடுத்தேன் அதில் என்னுடைய அண்ணி வளகாப்பு அன்று எனக்காக பிரியா எடுத்துக்கொடுத்த இரண்டு புடவைள நான் நான் வளைகாப்புக்கு கட்டினது போக கட்டாத இன்னொரு புடவை இருந்துச்சு உடனே அதை எடுத்து கட்டிக்கிட்டேன்
வளையல் தோடு கொலுசு எல்லாம் போட்டு பிரியாக்கு போன் பண்ணுனேன் ரெண்டு மூணு தடவ பன் பண்ணியும் அவ எடுக்கல. பிறகு மெசேஜ் பண்ணலாம்னு தோணுச்சு உடனே ஹாய் பிரியா இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வா உனக்காக நான் சமைத்து வைக்கிறேன் அப்படின்னு சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தேன். அதைப் பார்த்து அவ ரிப்ளை பண்ணல உடனே நான் சாரி பிரியா எல்லாத்துக்கும் நான் இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன் நீ வரும்போது இரண்டு முழம் கனகாம்பரம் பூ மட்டும் வாங்கிட்டு வா அப்படின்னு சொல்ல அதற்காக ஓகே அப்படின்னு ஒரு வழியா ரிப்ளை பண்ணிட்டா. அவர் ரிப்ளை பண்ண சந்தோசத்துல நான் கட்டின புடவையோட கடைவீதிக்கு போயி அவளுக்கு பிடித்த வஞ்சரம் மீன் வாங்கி சமையலுக்கு தேவையான மற்ற பொருட்கள் எல்லாம் வாங்கி அதோட இரண்டு முழம் மல்லிகை பூவும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். அவளுக்கு தேவையானது எல்லாத்தையும் சமைச்சு வச்சுட்டு அவ எப்ப வருவான்னு கட்டுன புடவையோட காத்துகிட்டு இருந்தேன் ஒரு வழியா காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது உடனே என்னை அறியாமல் எழுந்து ஓடிப் போய் கதவை திறந்தேன் அவ வாங்கி கொடுத்த புடவையில் என்னை பார்த்த பிரியா வியந்து போய் நின்னா நான் உள்ள வாடி என்று கூட்டிட்டு போய் அவளை உட்கார வைத்து எல்லாத்தையும் பரிமாறினேன். அவளும் சாப்டுட்டு ரொம்ப நல்லா இருக்கு அப்படின்னு சொன்னா உடனே நான் வாங்கிட்டு வந்த மல்லிகை பூ எடுத்தப்போ என்ன பாத்து ஹேய் நீதான் பூ வாங்கி இருக்கில்ல அப்புறம் எதுக்குடா என்னை வாங்கிட்டு வர சொன்ன அப்படின்னு கேட்க நான் வாங்கிட்டு வந்த பூ உனக்கு தாண்டி அப்படின்னு சொல்லி அவ தலையில வச்சு விட்டு. இதோ பார் நான் கட்டியிருக்க புடவைக்கு கனகாம்பரம் தான் அழகா இருக்கும் அப்படின்னு சொல்லி பூ வாங்கிட்டு வந்தியா இல்லையா அப்படின்னு கேட்டேன் அவ உடனே இல்ல அப்படின்னு சொல்ல என் முகம் வாடுவதை அவ பார்த்து டேய் அழுதுறாதடா பொய்தான் சொன்னேன் இந்தா அப்படின்னு ரெண்டு முழம் கனகாம்பரம் பூவ கையில கொடுக்க நான் திருப்பி அவ கையிலேயே கொடுத்து திரும்பினேன் அதை புரிஞ்சுக்கிட்ட அவ ஹேர் பின் எடுத்துட்டு வந்து எனக்கு கனகாம்பரம் பூ வச்சு விட்டா அப்படியே ரெண்டு பேரும் போய் டிவி சீரியல் பார்க்கத் தொடங்கினோம் நிறைய பெண்மையான விஷயங்களை பேசிக்கொண்டு அன்று தூங்கிட்டோம்.
Comments