என்னோட பெயர் ரமேஷ் என் அப்பா பெயர் ராஜா, அம்மா பெயர் ரேவதி, எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் பெயர் சுரேஷ் அண்ணனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகுது அண்ணன் மனைவி அதாவது என்னுடைய அண்ணி பெயர் திவ்யா.
எங்க அப்பா மிகப்பெரிய தொழிலதிபர் அவருடைய தொழிலுக்கு உதவியா என்னுடைய அண்ணன் அப்பா கூட இருந்து அவருக்கு துணையா எல்லா வேலைகளிலும் உதவி செய்வான். ஆனா நான் அப்படி இல்ல காலேஜ் முடிச்சுட்டு எந்த வேலையும் செய்யாமல் அப்பா காச செலவு பண்ணிட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு இருப்பேன். எனக்கு டிராவலிங் பண்ண ரொம்ப பிடிக்கும் அப்புறம் லாங் ஹேர் வளர்க்க ரொம்ப பிடிக்கும் காலேஜ் முடிச்ச உடனே முடி வளர்க்க ஆரம்பிச்சு இதோட ரெண்டு வருஷம் ஆகுது இப்ப என்னுடைய முடி என் முதுகுக்கு கீழே வரைக்கும் வளர்ந்து இருக்கு. அது மட்டும் இல்லாம எனக்கு மீசை தாடியும் சுத்தமா வளராததாள பாக்குறதுக்கு பொண்ணு மாதிரி தான் இருப்பேன்.
எங்க அப்பாக்கு மிகப்பெரிய அரசியல்வாதியாக தான் ஆச அதனால எங்க நிறுவனத்தை எங்க அண்ணன் கிட்ட தலைமை தாங்க சொல்லிட்டு இவரு அரசியலுக்குள்ள இறங்கினார் ஆனால் எங்க ஊர் பெண்கள் கிட்ட அவருக்கு பெரிய அளவுக்கு நல்ல பெயர் இல்லை. எங்க அப்பாவுக்கு ஒரு பெரிய கட்சியில MLA சீட்டும் கிடைத்தது. ஒரு நாள் பிரச்சாரத்திற்காக எங்க அப்பா கூட்டத்திற்கு போனப்போ அவருக்கு பெண்கள் மத்தியில் பெருசாக வரவேற்பு இல்லை நிறைய பெண்கள் அவருக்கு எதிரா குரல் எழுப்பினார்கள். அப்போது கூட்டத்திற்கு வந்த ஒரு பெண் எங்க அப்பாவை பார்த்து உங்களுக்கு பெண்களை பத்தி என்ன தெரியும் நம்ம ஊர்ல எந்த ஆண்களும் பெண்கள மதிக்கிறது இல்லை ஏன் நீங்களே பெண்களை மதிக்கிறது இல்லை உங்க மனைவியும் மருமகள்களை நீங்க ஒழுங்கா நடத்துவதில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கோம் அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சாங்க, அப்பொழுது அப்பா இல்லை எனக்கு புரியும் பெண்கள் சமூகத்தில் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்றது எனக்கு புரியும் உங்களோட உணர்வுகளை என்னால் உணர முடியுது அப்படின்னு சொன்னாரு. அதுக்கு அந்த பெண் அது எப்படி உங்களுக்கு தெரியும் பொண்ணுங்கள பத்தி உங்களுக்கு தெரியணும்னா ஒன்னு நீங்க ஒரு பொண்ணா இருந்து இருக்கணும் அப்படி இல்லன்னா உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அதை நீங்கள் வளர்த்திருந்தீங்கன்னா பெண்கள் படுற கஷ்டம் உங்களுக்கு புரியும் அப்படின்னு சொல்ல அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து போய் நின்னாரு. எங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல இப்ப பதில் சொல்லாமல் விட்டால் பெண்கள் வாக்கு நமக்கு விழாது நம்ம தோத்துருவோம் என்ற பயத்துல வேற வழி இல்லாம எங்க அப்பா ஒரு விஷயத்தை சொன்னாரு, எனக்கு பெண்கள் உணர்வுகளை புரிஞ்சுக்க முடியும் அதுக்காக நான் யாருகிட்டயும் சொல்லாத ஒரு விஷயத்தை இன்னைக்கு சொல்றேன் உங்களுக்கு தெரியும் எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க பெரியவன் சுரேஷ் சின்னவன் ரமேஷ். அதுல என்னோட இரண்டாவது பையன் ரமேஷ் ஒரு வருடத்திற்கு முன்னாடி அவனுக்கு பொண்ணுங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கணும்னு ஆசை அப்படின்னு என் மனைவி கிட்ட சொல்லி இருக்கான் அவனுக்கு பொண்ணுங்க மாதிரி இருக்க புடிச்சிருக்கு அப்படின்னு சொல்லி இருக்கான் என் மனைவி அவனை திட்டுனா. ஆனா அந்த விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு பொதுவா நம்ம ஊரு அப்பாக்கள் எல்லாம் அப்படி செய்வாங்களான்னு தெரியல ஆனா நான் என் பையன உனக்கு எது புடிச்சிருக்கு செய்டா உன் விருப்பம் போல இரு அப்படின்னு சொல்லி அவனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன் நீங்க நிறைய பேரு என் பையன பார்த்து இருப்பீங்க காலேஜ் முடிச்சு இவ்வளவு நாள் ஆகியும் மீசை தாடி கூட இல்லாமல் இடுப்பு வரைக்கும் அடர்த்தியான கூந்தலை வளர்த்து வச்சிக்கிட்டு பொண்ணு மாதிரி இருப்பான் அவன் ஏன் இப்படி இருக்கான்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா அவனுக்கு அந்த சுதந்திரத்தை கொடுத்தது நான் தான் அவனுக்குள்ள இருக்க பெண்மையை நான் புரிஞ்சுகிட்டேன் ஒரு ஆணுக்குள் இருக்கிற பெண்மையவே நான் புரிஞ்சுகிட்டேன்னா பெண்களே எந்த அளவுக்கு புரிஞ்சி செயல்படுவேன்னு நீங்க நினைச்சு பாருங்க அப்படின்னு சொல்லவும் கூட்டத்தில் இருக்கிறவங்க அதிர்ச்சியில் எங்க அப்பாவ பார்க்க உடனே எல்லாரும் வருங்கால எம்எல்ஏ ராஜா....... அப்படின்னு கோஷம் போட எங்க அப்பாவும் அத கேட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டாரு ஆனா மேடைகளையும் அப்பா பேசினது கேட்ட எங்க அம்மா அண்ணன் மற்றும் அண்ணிக்கு ஒரு அதிர்ச்சி ஆனா அந்த விஷயம் எனக்கு தெரியாது.....
Comments