அடுத்த நாள் காலை ரூமுக்கு அம்மா வந்தாங்க என்ன பார்த்து என்னடா இன்னைக்கு உன்ன பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னதும் இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு உட்கார்ந்து இருக்க மாப்பிள்ளைய பாக்கணும்னு அந்த அளவுக்கு ஆசையா அப்படின்னு கேட்க , நான் உங்கள பாத்து கோவத்தோட நீங்க பண்ண வேலையால நான் நைட்டு தூங்கவே இல்ல இப்ப வரைக்கும் எனக்கு தூக்கம் வரவே இல்லை அப்படின்னு சொன்னேன் சரி தூக்கம் வராட்டியும் பரவால்ல போய் குளிச்சிட்டு உனக்கு ஒரு பட்டு புடவை எடுத்து வச்சிருக்கேன் முதல் முறையா என்னோட பொண்ணு புடவை கட்ட போறா அதுவும் அவளை பொண்ணு பார்க்க வர அன்னைக்கே அமஞ்சு இருக்கு பாரேன் அப்படின்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே அனிதா வந்து உனக்கு உதவி பண்ணுவா அந்த புடவைய கட்டிட்டு தோடு ,வளையல் ,கொலுசு நெக்லஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் அதெல்லாம் போட்டுக்கிட்டு இரு நான் வந்துடறேன் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க. அப்போ அனிதா வந்தா என்ன பாத்து என்ன டி பன்ற கிண்டல் பண்ணாதடி எனக்கு ரொம்ப பயமா இருக்கு அப்படின்னு சொல்ல இதுல பயப்படறதுக்கு என்னடி இருக்கு எல்லா பொண்ணுங்களும் முதல் முறை அவர்களை பெண் பார்க்க வர்றப்ப சந்தோஷமும் வெட்கமும் தான் படுவாங்க நீ என்ன புதுசா சரி கிண்டல் பண்ணாம வந்த வேலைய பாரு அப்படின்னு சொன்னேன் நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா அப்படின்னு அனிதா சொன்னா சரின்னு குளிக்க போயிட்டு வந்தேன் அப்போ பார்த்தா அனிதாவோட இன்னும் ரெண்டு மூணு பொண்ணுங்க இருந்தாங்க அவங்கள பார்த்த உடனே எனக்கு ஒரே அதிர்ச்சி டக்குனு அனிதா பக்கத்துல வந்து பயப்படாதடா இவங்க எல்லாம் என்னோட கூட வேலை செய்றவங்க அவங்களுக்கு நீ பையன்கிறது தெரியாது என் ஒரு ஆளா உன்ன ரெடி பண்ண முடியாது என்று தான் நான் இவங்கள கூட்டிட்டு வந்தேன் அப்படின்னு சொன்ன உடனே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல முதல் முறை உள்பாவாடையோடு எனக்கு தெரியாத பொண்ணுங்க முன்னாடி நான் நிக்குறேன்.
அப்புறம் அப்படியே எனக்கு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சாங்க என்ன அலங்காரம் பண்ணும்போது அனிதா முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் இவ ஏன் இவ்வளவு சந்தோஷப்படுறான்னு எனக்கு புரியல நான் ரொம்ப அமைதியாவே இருந்தேன். அப்பொழுது வீட்டுக்கு முன்னாடி ஒரு கார் வர சத்தம் கேட்டது அனிதாவும் அவ கூட வந்த பெண்களும் போய் கண்ணாடி வழியாக எட்டி பார்த்து ஹே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்கடி மாப்பிள்ளை சும்மா சொல்ல கூடாது பாக்குறதுக்கே ரொம்ப அருமையான ஆண் மகனா தான் இருக்காரு நீ கொடுத்து வச்சவ தான் போ அப்படின்னு சொல்லி என்ன கிண்டல் பண்ணா. நான் எதுவும் முகத்தில் காட்டிக்காம அமைதியாகவே உட்கார்ந்து இருந்தேன் அப்பொழுது அம்மா உள்ளே வந்து அனிதா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க நான் சொல்றப்ப அக்ஷயா கையில காபி எடுத்துக் கொடுத்து அவளை ஹாலுக்கு கூட்டிட்டு வா அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அலங்காரங்கள் நடந்தது வனிதா எனக்கு தலை நிறைய மல்லிகை பூ வச்சு விட்டு ஒவ்வொரு நொடியும் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தா கூட வந்த பொண்ணுங்களும் அதை நினைச்சு சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க முன்ன பின்ன தெரியாதவங்க இருக்கிறதால என்னால வெளிப்படையா அனிதா கிட்ட எப்பவும் நடந்து கொள்வது போல அன்னைக்கு முடியல. அத நல்லா பயன்படுத்திக்கிட்டு என்ன வச்சு செஞ்சா. அப்ப அம்மா உள்ளே வந்து அனிதா அக்ஷயாவ கூட்டிட்டு ஹாலுக்கு வா அப்படின்னு சொல்லிட்டு போக அனிதா என்னை எழுப்பி என் புடவை மடிப்பு எல்லாம் சரி பண்ணி என் கையில காபி தட்டை கொடுத்து என்ன ஹாலுக்கு கூட்டிட்டு போக ஹால்ல அனிதாவோட அம்மா அப்புறம் எங்க ஊர்ல உள்ள சில பெண்களும் மாப்பிள வீட்டு பெண்கள் மற்றும் ஆண்களும் நிறைஞ்ச சபையா இருந்துச்சு.
என்னால தலை நிமிர்ந்து பார்க்க முடியல அம்மா என்ன பாத்து அக்ஷயா அப்படியே எல்லாருக்கும் காபி கொடும்மா அப்படின்னு சொல்லு நானும் ஒவ்வொருத்தருக்கும் காபி கொடுத்தேன். அப்படியே ஒவ்வொருவருக்கும் காபி கொடுத்துட்டு இருக்கும்போது அந்த தங்க டம்ளரில் இருக்க காபி மாப்பிள்ளைக்கு கூடுமா அப்படின்னு சொல்லவும் மாப்பிள்ளை கிட்ட போயி காபி தட்டை நீட்டினேன் மாப்பிள்ளை காபி எடுத்து என்னை நிமிர்ந்து பார்த்தார் என்னால அவர் முகத்தை பார்க்க முடியல ஏன்னு தெரியல அப்படி ஒரு வெட்கமாக இருந்தது உடனே என்னுடைய அம்மா அக்ஷயா கூச்சப்படாம தலை நிமிர்ந்து மாப்பிள்ளை நல்லா பாருமா அப்படின்னு சொல்லவும் நான் தலை நிமிர்ந்து மாப்பிள்ளை பார்த்தேன் எனக்கு மேலும் இனம் புரியாத வெட்கம் அதிகம் ஆயிடுச்சு ஏன்னா என்ன பொண்ணு பாக்க வந்திருக்க மாப்பிள்ளை வேற யாரும் இல்லை என் கனவுல எனக்கு புருஷனா வந்து அன்னிக்கு கோவில்ல மணி அடிச்சு அதே ஆண்மகன் தான் என்னுடைய சுய நினைவு இழந்து அவரை பார்த்துக்கிட்டு இருந்தேன் அப்பொழுது அவரும் என்னை பார்த்து சிரிக்க அவர் சிரிப்பை பார்த்ததும் எனக்கு வெட்கத்துடன் கலந்த சிரிப்பு வர நான் வெட்கப்பட்டு போய் அம்மா பின்னாடி நின்னுக்கிட்டேன். நான் பண்ணத பார்க்கவும் மாப்பிள்ளைக்கும் அவங்க வீட்டுக்காரர்களுக்கும் ரொம்ப சந்தோஷம் ஆனா அம்மாவுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு தான் கொடுத்துச்சு என்னுடைய நடவடிக்கையை பார்த்ததும் உடனே அம்மா அனிதா கூப்பிட்டு அக்ஷயாவ உள்ள கூட்டிட்டு போமா அப்படின்னு சொல்ல மாப்பிள்ளையோட அம்மா கலா இருப்பா பொண்ணு கொஞ்ச நேரம் இங்கேயே உட்காரட்டும் அப்படின்னு சொல்ல ஆண்கள் எல்லாம் கம்பீரமாய் சோபாவில் அமர்ந்திருக்க நான் பெண்களோடு பெண்களாக தலைகுனிந்து என் முந்தானையை எடுத்து என்னுடைய இடுப்பில் முடிந்து கொண்டு தரையில் அமர்ந்திருந்தேன் பிறகு சிறிது நேரம் கழித்து என்ன எந்திரிச்சு உள்ள போக சொல்லிட்டாங்க நான் உள்ளே வந்ததும் அனிதாவும் மற்ற பெண்களும் என்ன பார்த்து அக்ஷயா மாப்பிள்ளை உனக்கு புடிச்சிருக்கா சொல்லுடி ஏய் கூச்சப்படாம சொல்லுடி அப்படின்னு எல்லாரும் கேட்க அனிதாவும் அவங்களோட சேர்ந்து அக்ஷயா சொல்லுடி உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? அப்படின்னு கேட்க நான் அவளை பார்த்து முறச்சேன், உடனே என்னை பார்த்து இங்க பாரு மாப்ள லண்டன்ல வேலைக்கு போறாரு நல்ல சம்பளம் உனக்கு மட்டும் சரினா சொல்லு மாப்பிள்ளையோட அம்மாவும் ரொம்ப நல்ல குணமா இருக்காங்க மாப்பிள்ளைக்கு அப்பா வேற இல்லை உனக்கு சரின்னா கல்யாணத்துக்கு அப்புறம் தினம் தினம் புதுசு புதுசா புடவை கட்டிக்கிட்டு வீட்டு வேலைகளை செஞ்சுகிட்டு அழகான புருஷன் அன்பான மாமியார் அப்புறம் ஒரு வருஷத்துல குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கலாம் என்னடி சொல்ற அப்படின்னு கேட்க, எனக்கு மீண்டும் என் புருஷன் குழந்தையோட நான் இருக்கிற மாதிரி கண்ட கனவு தான் ஞாபகம் வந்துச்சு அதை நினைச்சு ஒருவித மயக்கத்தில் இருந்தேன். அப்புறம் சிறிது நேரம் கழித்து எங்களுக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சு போச்சு பையன் அடுத்த வாரம் லண்டன் போறான் நீங்க வேற பொண்ணு படிக்கணும்னு சொன்னீங்க உங்க பொண்ணுக்கு முதல்ல எங்க பையன புடிச்சி இருக்கான்னு கேட்டுட்டு முடிவு என்னன்னு சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அனிதாவோட தோழிகளும் ஊர்காரங்களும் கிளம்பிட்டாங்க அப்போ ரூம்ல அலங்காரத்தை கரைத்துக் கொண்டு இருந்த என்னிடம் வந்து அனிதா கேட்டா சரி எல்லாரும் போய்ட்டாங்க இப்ப சொல்லு உனக்கு அந்த பையனை உண்மையிலுமே புடிச்சி இருக்கா இல்லையா அப்படின்னு கேட்க அம்மா உடனே வந்து ஆமாண்டா பையன் வேற குணத்துலேயும் உருவத்திலும் ரொம்ப நல்லவனா இருக்கான் பொண்ணுக்கு ஓகே னா போன் பண்ணி சொல்ல சொல்லி இருக்காங்க உனக்கு ஓகேவா இல்லையான்னு சொல்லு அப்படின்னு கேட்க நான் வெட்கத்தில் முகம் சிவந்து தலைகுனிய என் மனசுக்குள்ள இருக்க பதில புரிஞ்சுகிட்ட எங்க அம்மா என்ன பார்த்து சிரிச்சுகிட்டே அனிதா அந்த போன எடுத்துட்டு வா அக்ஷயாவுக்கு மாப்பிள்ளை ஓகே போல இருக்கு சொல்லிடுவோம் அப்படின்னு போன வாங்கி கால் பண்ண உடனே நான் போன் புடுங்கி கட் பண்ணிட்டேன் விளையாடாதீங்கம்மா நீங்க சொன்ன மாதிரி ஒரு நாள் நான் இருந்துட்டேன் நான் சொன்னது நீங்க பண்ணிருங்க அப்படின்னு சொன்ன உடனே அம்மா ரொம்ப நன்றி டா உனக்கு நான் இந்த அளவுக்கு கஷ்டம் கொடுத்தோம் அதை நீ ரொம்ப அழகா கடந்து வந்துட்ட எனக்காக நீ இவ்ளோ பண்ணி இருக்க உனக்காக நான் அதை பண்ண மாட்டேனா அப்படின்னு சொல்லிட்டு டிரஸ் எல்லாம் அவுத்துட்டு வேற டிரஸ் மாத்திட்டு போய் நிம்மதியா தூங்கு மத்தது நான் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்க அப்பொழுது அனிதா வந்து அக்ஷய் உன்கிட்ட நான் ரொம்ப நாளா ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன் அதை இவ்வளவு நாள் சொல்ல நேரம் கிடைக்கல இனிமேலாவது சொல்லிடனும்னு தோணுது நான் சின்ன வயசுல இருந்தே உன்ன ரொம்ப காதலிக்கிறேன் டா எனக்கு எப்படின்னு சொல்றதுன்னு தெரியாம இவ்ளோ நாள் இருந்தேன் என்னோட வாழ்க்கை சராசரி பொண்ணுங்க வாழ்க்கை மாதிரி தான் இருந்துச்சு ஆனா உன்னோட வாழ்க்கை சராசரி பையன் வாழ்க்கை மாதிரி இல்ல உன் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை நீ பார்த்துட்ட அதனால உன்கிட்ட எப்ப சொல்றதுன்னு தெரியாம இருந்தேன் அப்படின்னு என்கிட்ட சொன்னா. அப்போது நான் நைட்டியோடயும் ஒத்த ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு நெத்தியில பொட்டோடையும் கையில வலையில் காலில் கொலுசு காதுல தோடு அப்படின்னு இருந்தேன் நான் அவளை பார்த்து கேட்டேன் நான் இந்த கோலத்தில் இருக்கும் போது என்ன பார்த்து நீ காதலிக்கிறதா சொல்ற இது எப்படி நான் எடுத்துக்கொள்வது என்று எனக்கு தெரியல அப்படின்னு கேட்டேன் .
தொடரும்......
Comments