Skip to main content

குலதெய்வ வேண்டுதல் ( part 17 )

 அம்மாவும் நான் கட்டியிருந்த கலர்லயே புடவை கட்டி இருந்தாங்க என்ன பார்த்து டேய் இந்த பாவாடை தாவணில எவ்வளவு லட்சணமா இருக்கு தெரியுமா சின்ன வயசுல ஸ்கூல் படிக்கிறப்ப முடி எல்லாம் வளர்த்து சுடிதார் எல்லாம் போட்டப்பவே உனக்கு பாவாடை தாவணி எல்லாம் கட்டி பார்க்கணும் ரொம்ப ஆசை ஆனா 5 வருஷம் கழிச்சு இப்போ அனிதா நிறைவேத்திட்டா அப்படின்னு சொல்லி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ன என்ன கன்னத்துல செல்லமா தட்டி ஏண்டி பொண்ணே கோயிலுக்கு நேரமாச்சு வா போலாம் அப்படின்னு என் கைய புடிச்சு கூட்டிட்டு போனாங்க பிறகு நானும் அனிதாவும் எங்க அம்மா மூன்று பேரும் கோவிலுக்கு போனோம். முதல் முதலா ஒரு பொண்ணு பாவாடை தாவணி கட்டி வீதியில நடந்து போறத அந்த பொண்ணும் சரி அவளை ரசிக்கிற ஆண்களோட கண்ணும் சரி கடைசி வரைக்கும் அவங்க வாழ்க்கையில மறக்க மாட்டாங்கன்னு சொல்லுவாங்க. ஒரு பொண்ணு வயசுக்கு வந்தா அவ தாவணி கட்டுவாங்குறது அவளுக்கு முன்னாடியே தெரியும் தெரிந்திருந்தும் அவளுக்கே அந்த நாள் அப்படி ஒரு மறக்க முடியாத நாளாக அமையும்னா ! நான் ஒரு பையன் அதுவும் 22 வயசு வாலிபப் பையன் பொம்பள மாதிரி பாவாட தாவணி கட்டி தலை நிறைய மல்லிகைப் பூ வச்சு வீதியில் நடந்து போறத என்னால் மட்டும் இல்லை என்னுடைய அம்மா என்னுடைய தோழி என்ன பார்க்கும் ஊர் ஜனங்கள் யாராலும் மறக்க முடியாத நாளாக தான் இருக்கும். 




கோவிலுக்கு போகும் போதே பல ஆண்கள் என்ன ஒரு மாதிரியா பார்க்க அனிதா என்னை பார்த்து டேய் என்னடா இவ்வளவு ஆம்பளைங்க ஒன்ன சைட் அடிக்கிறாங்க கண்டுக்காம போற கொஞ்சமாச்சு ஆம்பளைக்கு மதிப்பு கொடுத்து தலை நிமிர்ந்து பாருடா அப்படின்னு சொல்லி கிண்டல் பன்னா ! போடி எனக்கு தலை நிமிர்ந்து பார்க்க ரொம்ப கூச்சமா இருக்கு அப்படின்னு சொல்லி தலை குனிஞ்சு நடந்தேன் அப்போ அம்மா அனிதாவை பார்த்து நீயே என் பொண்ண கெடுக்காத டி வயசு பொண்ணுக்கு அழகு ஆம்பளைங்கள பார்த்தா தலை குனிஞ்சு நடக்கிறது தான். ஒரு பொண்ணுக்கு அதுவும் வயசு பொண்ணுக்கு சும்மாவே ஆம்பளைங்கள பார்த்தா வெட்கம் வரும் அதுவும் என் பொண்ணு மொத மொத பாவாடை தாவணி கட்டி கோயிலுக்கு போயிட்டு இருக்கா அப்ப அவளுக்கு எவ்வளவு வெக்கம் இருக்கும். உடனே அனிதா ஐயோ அம்மாவும் பொண்ணும் இப்படியே விட்டா மாறி மாறி நல்லா ஜிங்சக் அடிப்பீங்க. அப்படின்னு சொல்லி மூணு பேரும் சிரிச்சிட்டே கோவிலுக்கு போனோம் போய் அர்ச்சனை பண்ணிட்டு அர்ச்சனை தட்ட திரும்ப எங்க கையில கொடுக்கும்போது பூசாரி என் தலையில் கை வைத்து சமஸ்கிருதத்தில ஒன்னு சொல்லிட்டு உள்ள போனாரு உடனே அம்மாவும் அனிதாவும் நமட்டு சிரிப்பு சிரிச்சாங்க. நான் ஏன் சிரிக்கிறீங்க அப்படின்னு கேட்டதுக்கு ஒன்னும் இல்லடா பூசாரி இப்ப என்ன சொன்னார் என்று உனக்கு புரிஞ்சுதா அப்படின்னு கேட்டதுக்கு எனக்கு எப்படி புரியும் என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்டேன் உடனே அம்மா எனக்கு கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மருமகன் அமைவார்னு சொன்னாங்க அப்படின்னு சொல்லி சிரிச்சாங்க. என்னம்மா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல அனிதா அம்மா என்ன சொல்றாங்க அப்படின்னு கேட்டதுக்கு டேய் ஒன்னும் இல்லடா உனக்கு நல்ல புருஷன் கிடைச்சு நீ 16 குழந்தைங்க பெத்து தீர்க்க சுமங்கலியா வாழனும்னு சொன்னாரு அப்படின்னு சொல்லி சிரிச்சா டக்குனு எனக்கு என் மனசுக்குள்ள ஒன்னு தோணுச்சு அந்தக் கனவு ஞாபகம் வந்துச்சு நான் என் புருஷன் குழந்தை குட்டி ஓட கோவிலுக்கு வந்ததை நினைச்சு உடனே அதை நினைக்கவும் என் முகம் வெட்கத்துல சிவந்து போறத பாத்து எங்க அம்மாவும் அனிதாவும் என்னடி அதுக்குள்ள உன் புருஷனை பத்தின கனவுக்கு போயிட்டியா அப்படின்னு சொல்ல நான் ஒன்னும் இல்ல விடுங்கம்மா அப்படின்னு சொல்லிட்டு கோயிலை விட்டு வெளியே வேக வேகமா நடந்து வந்துட்டேன். அவங்களும் நடந்து வந்தாங்க கோயிலை விட்டு வெளியே வந்து நிற்கும்போது மணி அடிக்கும் சத்தம் கேட்டது சத்தம் கேட்டவுடனே திரும்பி பார்த்தா வேஷ்டி சட்டை கட்டி இருந்த ஒரு ஆண் அந்த மணியே அடிச்சிட்டு திரும்பினார் நான் எதிரிச்சியா அவர பாக்க அவரும் எதிர்ச்சியா என்ன பார்க்க அப்பதான் ஒரு விஷயத்தை நான் கவனிச்சேன் என் கனவுல எனக்கு புருஷனா வந்த அதே நபர்தான் அவரு ஒரு நிமிஷம் அதிர்ச்சியாகி கோவில் கோபுரத்தை பார்த்தால் என் கனவுல வந்து அதே கோவில் ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா புடவைக்கு பதிலா நான் பாவாடை தாவணியில் இருக்கேன் அவ்வளவுதான். அந்த நிமிடம் எனக்கு அந்த இடத்தை விட்டு எப்படியாவது உடனே போயிடனும்னு தோணுச்சு வாங்கம்மா கிளம்பலாம் அப்படின்னு அவசர அவசரமா அனிதாவின் அம்மாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் அப்படியே சில நாள் போக ஒரு நாள் வீட்டிற்கு ஒருத்தவங்க வந்தாங்க அம்மா போய் கதவை திறந்து அட கலா உள்ள வாடி உன்ன பார்த்து எவ்வளவு நாளாச்சு அப்படின்னு சொல்லி அக்ஷயா என்னோட ரொம்ப நாள் ஃப்ரெண்ட் கலா வந்து இருக்காங்கடி நல்ல காபி ரெண்டு போட்டு கொண்டு வா அப்படின்னு சொல்ல எனக்கு ஒரே அதிர்ச்சி என்ன அம்மா வேற ஒருத்தவங்க முன்னாடி என்ன பொண்ணு பேரு சொல்லி கூப்பிடுகிறார்கள் என்று ஒருவேளை யாரோ தூரத்து சொந்தமா இருப்பாங்க அதனால பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்றாங்க போல அது மட்டும் இல்லாம நான் சுடிதார் வேற போட்டு இருக்கேன் முடி வேற இப்போ இடுப்பு வரைக்கும் வழந்திருக்கு இந்தக் கோலத்தில் என்னை பார்த்தா அவங்க கண்டிப்பா பையன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க சரி பரவால்ல அம்மா சொன்னதும் சரிதான் அப்படின்னு காபி போட்டு எடுத்துக்கிட்டு அவங்க கிட்ட போய் கொடுத்தவுடனே 



அவங்க என்ன பார்த்து என்னமா நல்லா இருக்கியா நான் இன்னைக்கு உன்ன பாக்க தான் வந்தேன் அப்படின்னு சொன்னாங்க நான் உடனே அப்படியா ரொம்ப சந்தோஷம் என்ன இதுக்கு முன்னாடி நீங்க பார்த்து இருக்கீங்களா அப்படின்னு கேட்டதுக்கு நான் இப்பதான் உன்ன முதல் முதலாக பார்க்கிறேன் அப்படின்னு சொன்னாங்க உடனே அம்மா நீ உள்ள போமா நானும் கலா ஆன்ட்டியும் கொஞ்சம் பேசணும் அப்படின்னு சொல்ல நானும் அவங்க குடிச்சிட்டு வச்ச கிளாஸ் எடுத்துட்டு அடுப்படி போய் கழுவி வச்சுட்டு மாடியில் என் ரூமுக்கு போயிட்டேன் கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா மாடிக்கு வந்து ஒரு சின்ன பிரச்சனை டா அப்படின்னு சொன்னாங்க என்ன பிரச்சனை அப்படின்னு கேட்க அதை எப்படி சொல்றதுன்னு தெரியல டா ரொம்ப தயக்கமா இருக்கு அப்படின்னு சொன்னாங்க என்ன இருந்தாலும் முதல்ல சொல்லுங்கம்மா நான் உங்க பையன் தானே அப்படின்னு சொல்ல அப்பொழுது அனிதா வீட்டுக்குள்ள வந்தா அப்பொழுது அம்மா என்கிட்ட ஒன்னும் இல்லடா இப்ப கலா அத்தை என்று ஒருத்தவங்க வந்தாங்க இல்ல அவங்க என்னுடைய ஸ்கூல் நாட்களில் இருந்து நெருங்கிய தோழி

அக்ஷய் : சரிமா அதைத்தான் அங்கேயே சொன்னிங்களே அதுல என்ன பிரச்சனை

அம்மா : அன்னைக்கு நீ பாவாடை தாவணி கட்டி கோயிலுக்கு எங்க கூட வந்தல்ல

அக்ஷய் : ஆமா

அம்மா : அப்போதைக்கு அவளும் அவ பையனை கூட்டிட்டு கோவிலுக்கு வந்து இருக்கா பொண்ணு பாத்துட்டு இருக்காளாம் அவ பையனுக்கு அதுதான் என்ன பார்த்து பேசிட்டு போறா

அக்ஷய் : சேரி மா இதுல என்ன பிரச்சனை இருக்கு.

அம்மா : இல்லடா அவங்க பையன் போட்டோ குடுத்துட்டு போயிருக்காங்க

அக்ஷய் : சரி அதனால என்ன உங்களுக்கு தெரிஞ்சு நல்ல பொண்ணு எதுவும் இருந்தா அவங்க கிட்ட சொல்லுங்க அப்படி இல்லன்னா போட்டோவ புரோக்கர் அண்ணன் கிட்ட கொடுத்து ஏதாவது பொண்ணு கிடைக்குதான்னு தேடுங்க அப்படி இல்லன்னா ஆன்லைன்ல ப்ரோபைல் அப்லோட் பண்ணி மேட்ரிமோனி சைட்ல தேடலாம் இவ்வளவு ஆப்ஷன்ஸ் இருக்கு அப்புறம் என்ன பிரச்சனை

அம்மா : டேய் நான் வெளிப்படையா சொல்லிடுறேன் இன்னைக்கு வீட்டுக்கு வந்தால என்னுடைய தோழி கலா அவ பையன் பேரு விஷ்ணு அந்த பையன் அன்னைக்கு கோவிலில் பாவாடை தாவணியில் உன்னை பார்த்திருக்கிறான் உன்ன அவனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம் கட்டுனா உன்ன தான் கல்யாணம் கட்டிக்குவேன்னன்னு வீட்ல போயி சண்டை போட்டு இருக்கான்.

அக்ஷய் : அம்மா என்னம்மா இப்படி ஒரு குண்ட தூக்கி போடுற இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல

அம்மா : டேய் அது இல்லடா என் பொண்ணுக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை அவை இன்னும் படிக்கணும் நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைப்படுற அப்படின்னு சொல்லிட்டேன். ஆனா அந்தப் பையன் அடுத்த வாரம் லண்டன் போறானா அதுக்கு முன்னாடி ஒரு தடவை உன்னை வந்து பார்த்துட்டு போயிறணும்னு ஆசைப்படுறாங்க அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல.

அக்ஷய் : எது என்ன பார்த்துட்டு போக ஆசைப்படுறாங்களா என்னம்மா சொல்ற ஏம்மா கண்டதையும் பேசுற நான் உன்னோட பையன் , என்ன இன்னொரு பையன் பொண்ணு பாக்க வரேன்னு சொல்ற ?

அம்மா : ஒன்னும் இல்லடா நான் சொல்றத மட்டும் கேளு அவங்க வந்து ஒன்னு பொண்ணு பாத்துட்டு போகட்டும் பாத்துட்டு போனதுக்கு அப்புறம் புடிக்கலைன்னு சொல்லிக்கலாம் அது ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் பாக்குறதுக்கு முன்னாடியே நம்ம சொன்னோம்னா அவளுக்கும் எனக்கும் உள்ள நட்புல விரிசல் விழுந்துரும்டா சின்ன வயசுல அம்மா படிக்க முடியாம கஷ்டப்பட்டப்ப கலாவும் அவங்க அப்பாவும் எங்களுக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்காங்க அதுக்கு பதிலா நான் என்ன அவங்க பையனுக்கு உன்னை கல்யாணம் பன்னியா கொடுக்க போறேன்

அனிதா : அக்ஷய் ஆன்ட்டி சொல்றது சரி தான் . பெருசா ஒன்னும் இல்ல நாளைக்கு ஒரே ஒரு நாள் அவங்க வந்து உன்ன பாத்துட்டு போக போறாங்க யோசிச்சு பாரு போன வாரம் கோவிலுக்கு போனோம் அப்ப எத்தனை பேர் உன்னை பார்த்திருப்பாங்க அந்த மாதிரி நினைச்சுக்கோ

அம்மா : ஆமாண்டா எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் பண்ணு நீ இதை பன்னாட்டுடி என் நட்புக்கு நான் செய்ற மிகப்பெரிய துரோகம் ஆகிடும் அப்படின்னு கெஞ்ச வேற வழி இல்லாம 

அக்ஷய் : சரி நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்குறேன் ஆனா நீங்க சொன்னபடி அவங்க கிட்ட மத்த விஷயங்கள் எல்லாம் சொல்லி இருக்கணும் அப்படின்னு சொன்னேன்.

அம்மாவும் ரொம்ப நன்றிடா அப்படின்னு சிரிச்சிட்டு கீழ போய்ட்டாங்க அப்போ அனிதா என் பக்கத்துல வந்து என்னடி கல்யாணம் பண்ண நாளைக்கு மாப்பிள்ளை உன்னை பார்க்க வர போறாரு நாளைக்கு காலைல சீக்கிரமே எந்திரிச்சு குளிச்சிட்டு இரு நான் வந்து உனக்கு அலங்காரம் பண்ணி விடறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டா.


 எனக்கு நாளைக்கு என்ன ஆகப்போகுதோ அப்படின்னு நினைச்சு தூக்கமே இல்லாம புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.



தொடரும்.......

Comments

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...