அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அம்மாக்கு சமையல் வேலைகளிலும் மற்ற வீட்டு வேலைகளிலும் உதவி செய்ய ஆரம்பித்தேன். அம்மா அப்படியே எனது வீட்டு வேலைகளை அதிகப்படுத்தினாங்க நான் கேட்டேன் அம்மா நீ கொடுக்கிற வேலை எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குமா சமைக்கிறது பாத்திரம் கழுவுறது எல்லாம் ஓகே ஆனா துணி துவைக்கிறதும் வீட சுத்தம் பண்றதும் ரொம்ப கஷ்டமா இருக்கு இடுப்பு எலும்பு உடைந்துவிடும் போல இருக்கு அப்படின்னு சொன்னேன் உடனே அவங்க இததானடா நான் இத்தனை வருஷமா பண்ணிட்டு இருக்கேன் ஏன் இடுப்பு எலும்பு உடையாதா பேசாம பண்ணு இல்ல வேலைக்கு கிளம்பு அப்படின்னு சொல்ல நான் என்னம்மா பண்றது ஏதோ ஒரு நினைப்புல கொஞ்ச நாள் சும்மாவே கடந்துவிட்டேன் இப்ப எந்த கம்பெனிக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தாலும் ஏன் இவ்ளோ பெரிய கேப் இல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கான்னு தான் கேக்குறாங்க அப்படின்னு சொல்ல உடனே அம்மா பேசாம ஒன்னு பண்ணு உனக்கு சின்ன வயசுல இருந்து எப்ப எல்லாம் நல்லது நடக்கணும்னு நினைக்கிறோமோ அப்பெல்லாம் நம்ம குல தெய்வத்தை தான் வேண்டிக்கொள்வோம் மறுபடியும் நம்ம குலதெய்வத்தையே வேண்டு அது உனக்கு கை கொடுக்கும் அப்படின்னு சொல்ல நானும் கண்ண மூடி வேண்டிகிட்டேன் அம்மா உடனே என்னடா வேண்டுன அப்படின்னு கேட்க இல்லம்மா அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள எனக்கு ஒரு நல்ல வேலை அமையனும் அப்படி அமைஞ்சா நான் என் தலை முடியை காணிக்கை செலுத்துகிறேன் அப்படின்னு வேண்டிகிட்டேன்னு சொல்ல அம்மா சிரிச்சாங்க நான் ஏன் சிரிக்கிறீங்க அப்படின்னு கேட்க அப்ப என்னோட பையன் நான் பழையபடி பார்க்க போறேன் போல அப்படின்னு சொல்ல நான் அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது இந்த தடவை பாருங்க அப்படின்னு சொன்னேன் மூணு மாதங்கள் கழிந்தது என்னுடைய கூந்தலும் என் தோல் வர வளர்ந்தது ஆனா எனக்கு வேலையும் கிடைக்கல அதற்கு பதிலாக வீட்டு வேலைகள் தான் அதிகமாச்சு. கடைசியா என் தோள்பட்டை வர எனக்கு கூந்தல் இருந்தது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இப்ப என் தோள் பட்ட அளவு முடியோட என்னுடைய முகத்தை பார்க்க என்னுடைய முகம் ரொம்பவே மாறி இருந்தது
அந்த சின்ன பையன் முகமெல்லாம் மாறி ஒரு நல்ல இளமையான தோற்றமா இருந்தது ஆனாலும் மீச தாடி எல்லாம் வளராமல் பாக்குறதுக்கு இப்பயும் பெண் போல சாயல் தான் இருந்தது. அனிதாவும் என்ன பார்த்து கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டா ஏதோ என்னுடைய வாழ்க்கை அஞ்சு வருஷம் பின்னாடி போன மாதிரி ஒரு உணர்வு.
தொடரும்.....
Comments