பிறகு அப்படியே நாட்கள் சென்றது நானும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு எனக்குள்ள பல கேள்விகள் இதுவரைக்கும் உள்ளூருக்குள்ளையே ஸ்கூல் படிச்சதனால நான் ஆம்பள பையனா இருந்தாலும் பொண்ணு மாதிரி முடி வளர்த்து இருந்ததை பார்த்து யாரும் பெருசா நினைக்கல ஆனா இப்போ காலேஜ் போக போறேன் அதற்கு பக்கத்து ஊருக்கு போகணும் அங்க இதே மாதிரி போனா கண்டிப்பா என்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க அத எப்படி சமாளிக்க போறேன்னு பயத்திலேயே இருந்தேன் அப்பொழுதுதான் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து நான் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று இருந்தேன். என்னுடைய தோழி அனித்தாவும் 80 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று இருந்தால் இருவரும் காலேஜ்க்கு சேரலாம்னு போனோம் அட்மிஷன் ரொம்ப சுலபமாக கிடைத்தது ஆனால் என்னுடைய தோற்றத்தை பார்த்த யாரும் என்ன பையன்னு ஒத்துக்கல அதேசமயம் என்ன ஒரு பொண்ணாவும் அவங்களால அனுமதிக்க முடியாத நிலையில கல்லூரி நிர்வாகமும் இருந்ததால என்ன முடிய வெட்டிட்டு காலேஜ் தொடங்கும் போது வந்துடுங்க அப்படின்னு ரொம்ப கண்டிப்பா சொல்லி அனுப்பிட்டாங்க நானும் வீட்டிற்கு வந்து ஒன்னும் புரியாம இருந்தேன். அப்பொழுது அம்மா என்னடா அட்மிஷன் கிடைச்சதா அப்படின்னு கேட்க நானும் நடந்ததெல்லாம் செல்ல அம்மா உடனே இதுல என்னடா இருக்கு அவங்க சொல்றதுல என்ன தப்பு நீ ஆம்பள பையன் தானே எந்த ஊர்ல ஆம்பள பையன் இப்படி இடுப்பு வரைக்கும் முடி வளர்த்து வச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கான் எனக்கே எப்படி இதை ஏத்துக்கிறதுன்னு தெரியல டா ஏன்னா உன்ன இப்படி நீளமான தலைமுடியோட பார்க்கத்தான் எனக்கும் புடிச்சிருக்கு ஆனா இது உன்னுடைய வாழ்க்கை இந்த நேரத்துல நம்ம சரியான முடிவு எடுத்து தான் ஆகணும் இப்பதான் உனக்கு உடல் ரீதியாகவும் இந்த பிரச்சனையும் வரவில்லையே வா நம்ம குலதெய்வத்திற்கு போய் மொட்டை போட்டுட்டு வந்துடலாம் அப்படின்னு சொல்ல நான் அதிர்ந்து போய் என்னுடைய ரூமுக்கு போய் கண்ணாடில என்னுடைய ஜடைய தூக்கி என் மார்பு மேல போட்டு வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்படியே ஜடைக்கு கீழே உள்ள ரப்பர் பேண்டை பிரித்துவிட்டு என் தலை முடியை ஓபனாக அவிழ்த்துவிட்டு என் கூந்தல் அடர்த்தியையும் என் வட்டமான முகத்திற்கு அது கொடுக்கும் அழகையும் பார்த்து எனக்கு அழுக வர ஆரம்பிச்சிருச்சு ஆனா வேற வழியில்லை இந்த நேரத்தில் இருந்து என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் மாறனும்னா அது நம்ம கைல இல்ல அப்படின்னு நானும் இதை ஏற்றுக் கொள்ள தயாரானேன் அடுத்த நாள் விடிந்தது அனிதாவுக்கும் அவங்க அம்மாவிற்கும் செய்தியை சொல்லிக் கொண்டு அவர்களையும் அழைத்து எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்றோம் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பூசாரி என் கையில் பூவ கொடுத்து வச்சிக்க சொன்னப்ப என் கண்ணுல இருந்து என்னை அறியாமலே கண்ணீர் வந்தது பிறகு கனத்த இதயத்துடன் வேண்டுதலை நிறைவேற்றினேன் என் அருமையான கூந்தலை இழந்து வீட்டிற்கு திரும்ப வந்தோம் அன்று இரவு என் வாழ்க்கையில இந்த அளவுக்கு நான் ஒரு கஷ்டத்தை அனுபவிக்காத படி அன்னைக்கு ஒரு கஷ்டத்தை அனுபவிச்சேன் அவ்வளவு அழுகைகள். இருந்தாலும் அது தான் வாழ்க்கை எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு கல்லூரிக்கு சென்றேன் அப்படியே கல்லூரி வாழ்க்கை சென்றது ஆனால் மூன்று வருடம் கல்லூரியில் படித்தும் அனிதாவைப் போல வேறு ஒரு நெருக்கமான தோழியோ தோழனோ எனக்கு கிடைக்கவே இல்லை கல்லூரி படிப்பு முடிந்தது வேலை தேட ஆரம்பித்தோம் ஆனால் படிப்புல எந்த அளவுக்கு நான் ஆர்வமான மாணவனாய் இருந்தேனோ அந்த அளவுக்கு வேலைக்கு போவதில்லை எனக்கு எண்ணம் இல்லை. கல்லூரி படிப்பை முடித்த பிறகு வீட்டிலேயே நேரத்தை கழித்தேன் ஆனா அனிதா எங்கள் ஊருக்குள்ளேயே ஒரு நல்ல ஏஜென்சிஸ் க்கு வேலைக்கு போயிட்டா அவளுடைய தம்பியும் நாங்கள் படித்த கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்தான் இப்படியே நாட்கள் கடக்க கடக்க நானும் வேலைக்கு பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காததால் அம்மா ரொம்பவே திட்ட ஆரம்பிச்சிட்டாங்க டேய் வேலைக்கு தான் போகாம சும்மா கிடக்கிற வீட்டு வேலைலயாச்சும் கொஞ்சம் எனக்கு உதவி செய்டா அப்படின்னு சொல்ல நானும் வேற வழி இன்றி சின்ன சின்ன வீட்டு வேலைகளில் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன்.
தொடரும்......
Comments