ரூம்குள்ள போயி கதவை சாத்தி படுத்தேன். ஆனா தூக்கமே வரல அம்மா என்ன பொண்ணு மாதிரி நடத்துவதும் என் புருஷன் வீடு மாமியார் அப்படி இப்படின்னு சொன்ன வார்த்தை எல்லாம் என்னை தூங்க விடல என் மனசுக்குள்ள என்னென்னமோ தோனிட்டே இருந்துச்சு அப்புறம் அப்படியே தூங்கிட்டேன் அன்று இரவும் ஒரு கனவு அதுல நான் என் புருஷன் என்னோட குழந்தையோட என் அம்மா வீட்டுக்கு வந்திருக்க மாதிரியும் எங்க அம்மா எங்கள அன்போட அழைத்து என் புருஷனுக்கு வேணுங்கிறதெல்லாம் செஞ்சு கொடுத்து அன்பு செலுத்துற மாதிரியும். பிறகு அம்மா அக்ஷயா உன் புருஷன் ரெடி ஆயிட்டாரு பாரு சீக்கிரம் போய் அந்த பச்சை கலர் பட்டுப் புடவையை கட்டிட்டு வா நான் போய் என் பேத்தியா ரெடி பண்றேன் கோவிலுக்கு டைம் ஆகுதுடி அப்படின்னு சொல்ல இதோ வந்துட்டேன் அம்மா அப்படின்னு சொல்லி ரூமுக்குள்ள என்னுடைய பிளவுஸ்க்கு ஹுக் மாட்டிட்டு பதில் சொல்றேன், அப்புறம் கார் எடுத்துட்டு என் புருஷன் காரை ஓட்ட நான் முன்னாடியும் எங்க அம்மாவும் என்னுடைய பொண்ணும் பின்னாடி உட்கார்ந்து கோயில் வாசல்ல போய் இறங்க ஏங்க போயி ரெண்டு மூலம் மல்லிகைப் பூ வாங்கிட்டு வாங்க நான் போய் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன் அப்படின்னு நான் சொல்ல என் புருஷனும் பூவ வாங்கிட்டு வந்து என் தலையில வச்சு விட அதை என்னுடைய அம்மா பார்த்து வெட்கப்பட அப்படியே புடவை மடிப்ப கையில பிடிச்சுகிட்டு என்னுடைய மார்புல உள்ள என்னுடைய சேலையை இழுத்து சரி பண்ணிக்கிட்டு மல்லிகை பூவை தூக்கி என் தோளில் போட்டுக்கிட்டு அழகான குடும்ப பொண்ண நான் அண்ணநடை நடந்து என் புருஷனோட கோவிலுக்குள்ள போக
அங்க என்னுடைய தோழி அனிதா அவ புருஷனோட கோயிலுக்குள்ள வர ரொம்ப நாள் கழித்து சந்தித்து கொண்ட இரண்டு தோழிகள் போல நாங்கள் இருவரும் பேச கண்விழித்து எழுந்தேன். எழுந்து அடுத்து ஐந்து நிமிடத்திற்கு சுயநினைவே இல்லாம உக்காந்திருந்தேன் வந்த கனவெல்லாம் நினைச்சு சொல்ல முடியாத பல எண்ணங்கள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு அதுக்கப்புறம் அடிக்கடி நான் சாப்பிடும் போதும் டிவி பார்க்கும் போதும் ஸ்கூலுக்கு போகும்போது அந்த கனவு ஞாபகம் வந்துகிட்டே இருந்துச்சு
தொடரும்......
Comments