Skip to main content

குலதெய்வ வேண்டுதல் ( part 10 )

 


அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது அம்மா வந்து டேய் அக்ஷய் உன்னுடைய துணி எல்லாம் காஞ்சுருச்சுடா போய் குளிச்சிட்டு வந்து உன் விருப்பம் போல உன்னுடைய டிரஸ் எல்லாம் எடுத்து போட்டுக்கோ அப்படின்னு சொன்னாங்க ஆனா எனக்குள்ள ஏதோ ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு நேற்று இரவு சுடிதார்ல கண்ணாடியில் தோன்றிய நான் எனக்கு ரொம்ப அழகாக தோன்றியது அதனால இப்பொழுது இந்த சுடிதார் கழட்டி போட்டுட்டா மறுபடியும் அந்த வாய்ப்பு எப்ப கிடைக்கும் தெரியல அதனால என்ன சொல்றதுன்னு தெரியாம இல்லமா இப்ப எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு நான் லீவு நாள்னா சாயந்திரம் தானே குளிப்பேன் அதனால இன்னிக்கும் சாயந்திரமே குளிக்கிறேன் அப்படின்னு சொன்னேன் டேய் நீ சாயந்திரமே பொறுமையா குளி. என் சுடிதார் மட்டுமாவது கழட்டி கொடு வேர்வை நாத்தம் இங்கவர அடிக்குது அப்படின்னு சொன்னாங்க எனக்கு கழட்டிக் கொடுக்க மனசு இல்லாட்டியும் நான் இப்படியே பேசிகிட்டு இருந்தா என்ன அம்மா தப்பா நினைக்கிறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு அப்படின்னு சரி மா அப்படீன்னு சொல்லிட்டேன். டேய் அக்ஷய் மொதல்ல காய்ஞ்ச உன்னோட துணி எல்லாம் மொட்டை மாடியில் தான் கிடைக்கும் போய் எடுத்துட்டு வந்து அப்புறம் குளிக்க போ அப்படின்னு சொல்ல நான் உடனே ஏம்மா என்னை என்ன சுடிதாரோடு மாடிக்கு போக சொல்றியா யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க நான் குளிச்சு முடிச்சுட்டு போறேன் அப்படின்னு சொல்லி குளிக்க போயிட்டேன் போய் குளிச்சிட்டு துண்ட கட்டிட்டு சரிமா நான் போய் மாடியில் துணி எடுத்துட்டு வரேன் அப்படின்னு அம்மா கிட்ட சொன்னவுடனே அம்மா என்னை பார்த்து முறைச்சாங்க ஏன் முறைக்கிற நான் தான் குளிச்சிட்டு வந்துட்டேன்ல்ல அப்புறம் என்ன அப்படின்னு கேட்டதுக்கு நான் உன்கிட்ட அப்பவே என்ன சொன்னேன் துணிய எடுத்துட்டு வாடா காஞ்சிருக்கும்ன்னு எப்போ போய் உன் துணியெல்லாம் பாரு அப்படின்னு சொன்னவுடனே நானும் வெளியே போய் பார்த்தா திடீர்னு மழை பெருசா பிடிச்சுகிச்சு அய்யய்யோ இப்ப என்ன பண்றது அப்படின்னு கேட்க அம்மா உடனே வேற என்ன இன்னைக்கு என் துணி தான் உனக்கு அப்படின்னு சொல்ல உள்ளுக்குள்ள எனக்கு சின்ன சந்தோஷம் இருந்தாலும் வெளியகாடிக்காம அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் இன்னைக்கு வெறும் துண்டுடோடே இருந்துக்குறேன் அப்படின்னு சொன்னதுக்கு டேய் ரொம்ப பண்ணாத போய் உன் ரூம்ல வெயிட் பண்ணு நான் உனக்கு துணி எடுத்துட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாங்க நானும் என்னுடைய ரூமுக்கு போய் வெயிட் பண்ணேன் எனக்குள்ள பல கேள்வி அம்மா எனக்கு என்ன துணி எடுத்துட்டு வர போறாங்க அப்படின்னு எனக்குள்ள பல கேள்விகள் கண்ணாடி முன்னாடி நின்னு எந்த மாதிரி சுடிதார் போட்டா எனக்கு அழகா இருக்கும்னு நினைச்சு ஏக்கத்தில் என்ன பார்த்துட்டு இருந்தேன் அப்பொழுது உள்ளே வந்த அம்மா இதற்கு முன்னாடி நான் போட்டு இருந்த மாதிரி சாதாரண சுடிதார் இல்லாம கொஞ்சம் வித்தியாசமா ஒரு சுடிதார் கொண்டு வந்து கொடுத்தாங்க இது என்னம்மா அப்படின்னு கேட்டதுக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல பேசாம போடு அப்படின்னு சொல்லி கிளம்பிட்டாங்க பிறகு நானும் அந்த சுடிதார் எடுத்து போட்டு வழக்கம் போல கண்ணாடியில் என்னை பார்த்து என்னை நானே ரசிச்சு சிரிச்சுகிட்டு இருந்தேன்.




 பிறகு அம்மா சமையல் கட்டில் இந்தப்போ எனக்கு ஏனோ தெரியல நானா போய் அம்மாகிட்ட அம்மா நீங்க கொடுத்த சுடிதார் எனக்கு நல்லா இருக்கா அப்படின்னு போட்டுட்டு போய் அவங்க கிட்ட காட்டினேன்




 நான் ஏன் அப்படி கேட்டேன்னு எனக்கு தெரியல ஆனா அம்மாவும் மனசுக்குள்ள பல எண்ணங்கள் இருந்தாலும் என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா உனக்கு அவ்ளோ அழகா இருக்கு அப்படின்னு சொல்லி போய் டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி உக்காரு வரேன் அப்படின்னு சொன்னாங்க நானும் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி போய் உட்கார்ந்து இருந்தேன் பிறகு அம்மா தேங்காய் எண்ணெயும் சீப்பும் கொண்டு வந்து எனக்கு தலைவார ஆரம்பிச்சாங்க




 அப்பொழுது அம்மா, டேய் அக்ஷய் அந்த ரப்பர் பேண்ட் எடு. உனக்கு போனி டைல் போட்டுவிட்டு நான் கிளம்புறேன் சாதம் அடுப்புல இருக்கு அப்படின்னு சொன்ன உடனே இல்லம்மா எனக்கு ஜடை பின்னி விடு அப்படின்னு நா வெக்கத்த வெளிகாடிக்காம சொல்ல அப்போ இரு நான் போய் சாதத்தை அடுப்பில் இருந்து இறக்கிட்டு வந்துடறேன் அப்படின்னு சொல்லி போய் இறக்கிட்டு வந்து எனக்கு ஜடை பின்னி விட்டாங்க பின்னி விட்டுட்டு சரி நீ போய் டிவி பாரு நான் போய் சாதத்தை வடித்து விட்டு உனக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு போனாங்க நான் அந்த புது சுடிதார்ல என்ன பாத்துட்டு இருந்த போ என்னை அறியாமலே என் ஜடையை தூக்கி என் தோளில் போட்டு என்னை ரசிச்சிட்டு இருந்தேன் அப்பொழுது வேலையை முடித்து விட்டு வந்த அம்மா டேய் கண்ணாடி பார்த்தது போதும் வந்து சாப்பிடுவா அப்படின்னு சொல்லி சாப்பாடு எடுத்து வச்சாங்க இருவரும் சாப்பிடலாம்னு தட்டை எடுக்குறப்போ தட்டுல ஒரு கருப்பு கலர் மேல கல்லு வச்ச ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி இருந்துச்சு அதை பார்த்து அம்மா என்னம்மா சாப்பிடற தட்டுல பொட்டு ஒட்டி இருக்கு அப்படின்னு சொன்ன உடனே டேய் நீ சாப்பிடுற இடத்துலயா ஒட்டி இருக்கு தட்டுக்கு பின்னாடி தானடா ஒட்டி இருக்கு அது உன்னோட தட்டு என்ற அடையாளத்துக்காக ஒட்டுனேன் அப்படின்னு சொன்ன உடனே , சரி இருங்க அதனை எடுத்துப் போட்றேன் அப்படீன்னு எடுக்க போனேண் அப்போ அம்மா டேய் அந்த பொட்டு மொத்தமே என்கிட்ட மூணு தான் இருக்கு தூக்கி ஏதும் போட்றாத அது தட்டில் இருக்கிறது உனக்கு சங்கடமா இருந்துச்சுன்னா ஒரு நிமிஷம் இரு அப்படின்னு சொல்லி அந்த பொட்டை எடுத்து என் நடு நெத்தியில எனக்கு வச்சுவிட்டாங்க. என்னமா இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா இல்ல தலைமுடி வளர்க்க சொன்ன சுடிதார் போட சொன்ன இப்ப என்னன்னா பொட்டும் வச்சு விட்டுட்ட போற போக்க பார்த்தா எனக்கு புடவை கட்டிவிட்டு வீட்டு வேலை எல்லாம் செய்ய வச்சு உன்ன மாதிரியே ஒரு பொம்பளையாக்கிடுவ போல அப்படின்னு கேட்டேன், அதுக்கு அம்மா எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் ஒன்னும் இல்லடா நீ சொல்றத பார்த்தா உனக்கு தான் அந்த ஆசை எல்லாம் இருக்கும் போலையே அப்படின்னு என்னை நக்கல் பண்ணி சிரிச்சாங்க நான் உடனே கோவப்பட்டு சாப்பாடு பாதியில் வைத்துவிட்டு எந்திரிக்க கோபப்படாதடா ஒரு விளையாட்டுக்கு தானே சொன்னேன் முதல்ல எதை சொன்னாலும் சினுங்குறது தொட்டதுக்கெல்லாம் கோச்சிக்கிறது அதெல்லாம் நிப்பாட்டு இல்லன்னா நாளைக்கு கல்யாணம் ஆகி உன் புருஷன் வீட்டுக்கு போறப்போ உன் மாமியார்காறி உன்ன லெஃப்ட் ரைட் வாங்கிடுவா அப்படின்னு சொல்லி மேற்கொண்டு சிரிக்க நான் கோவத்துல சாப்பாடு வச்சுட்டு எந்திரிச்சு ரூமுக்கு போயிட்டேன்.



தொடரும்.......

Comments

Anonymous said…
Unga Twitter I'd solunga please
Iron man said…
Super super
Apdiye continue pannunga please
Ronba sweet ana story
Anandhi said…
Thank you 😊 sure kandipa continue pandren
Anandhi said…
https://twitter.com/APottachi/status/1757668011568398372?t=EfDbzgbWkI8mZ-7WxI7k9A&s=19
Anonymous said…
Next past sekaram upload pannuga
Anonymous said…
Plz continue... Plz plz
Anonymous said…
Epo thaanga poduvinga next parts? 😒
Vasantha said…
Your story very super sister
Anonymous said…
Next part upload
Anonymous said…
Next part please
Anonymous said…
Waiting for next part

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...