நான் வீட்டில் லைட் போட்டுட்டு அனிதா வீட்டுக்கு போனேன் அப்பொழுது அனிதாவிற்கு அவங்க அம்மா தலை சீவி ஜடை போட்டு விட்டுட்டு இருந்தாங்க என்ன பார்த்ததும் வாடா வந்து நீயும் உட்காரு உன்னோட ஜடையும் பாரு காலைல போட்டப்ப டைட்டா இருந்துச்சு இப்ப லூசு ஆயிடுச்சு இப்படியே விட்டா இன்னும் அரை மணி நேரத்துல ஜடை பிரிஞ்சுரும் வா பின்னி விடறேன் அப்படின்னு சொல்ல நான் பரவால்ல ஆன்ட்டி மாலை நேரம் தானே சும்மா ஜடையை பிரித்துவிட்டு கொண்ட மட்டும் போட்டு விடுங்க போதும் அப்படின்னு சொன்னேன் டேய் நான் தான் பலவாட்டி சொல்லி இருக்கேன்ல்ல உனக்கு இருக்க அடர்த்திக்கு உனக்கு கொண்ட போட்டா உன் தலையை விட இந்த கொண்ட தான் பெருசா தெரியும் ஒழுங்கா வந்து உட்காரு அப்படின்னு சொல்லி ஜடை பின்னிக்கொண்டு இருந்தார்கள் இப்பொழுது எதிரே அனிதா கையில மல்லிகைப்பூவோட நடந்து வந்தா வந்து நாலு முழம் மல்லிகை பூவ அளவெடுத்து சரியா இரண்டு இரண்டு மூலமா கட் பண்ணி ஒரு பகுதியை கீழே வச்சுட்டு இன்னொரு பகுதியை ஹேர் பின் எடுத்து அவ தலையில வச்சு பின் பண்ணிக்கிட்டா அப்படியே கண்ணாடியை பார்த்து நின்னுகிட்டு இருந்தா. அப்பொழுது என் மனசுக்குள்ள இவ என்ன முதுகு வரைக்கும் முடிய வச்சுக்கிட்டு கண்ணாடி முன்னாடி இவ்வளவு நேரம் நின்னு அவ கூந்தல அழகு பாத்துட்டு இருக்கா இதுவே என் அளவுக்கு எல்லாம் முடி இருந்தா இவ அலப்பறைய தாங்க முடியாது டா அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சு சிரிச்சுகிட்டு இருந்தேன். அப்போ தேவி ஆன்ட்டி ஏண்டி அனிதா எவ்வளவு நேரம் தான் கண்ணாடி முன்னாடி நிப்ப உனக்கு இருக்க முடிக்கு ரெண்டு முழம் பூ வச்சுருக்கதே ஓவர் தான் அதை இவ்வளவு நேரம் கண்ணாடி முன்னாடி நீ பாக்குறதும் ரொம்ப ஓவர் தான் டி அப்படின்னு சொல்லி இதோ பாரு அக்ஷயக்கு எவ்வளவு முடி இருக்கு இவனுக்கு இருக்கிற அளவுக்கு இரண்டு முழம் ஏன் நாலு முழம் பூ வச்சாலும் எடுப்பா இருக்கும் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல எப்படி உணர்வு வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உட்கார்ந்து இருந்தேன். அப்போ அனிதா ஓ அப்படியா வேணும்னா மிச்சம் இருக்கு ரெண்டு முழத்தை அவனுக்கே வச்சு விடுங்க அப்படின்னு சொன்னா உடனே தேவி ஆன்ட்டி நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அந்த ரெண்டு முழத்தை அக்சைக்கு தான் வச்சு விட போறேன் அப்படின்னு சொன்னாங்க நான் திரும்பி ஆண்டியை பார்த்து ஆன்ட்டி என்ன சொல்றீங்க பூவெல்லாம் பொம்பளைங்க வைக்கிறது நான் எப்படி வச்சுக்க முடியும் சும்மா கிண்டல் பண்ணாதீங்க ஜடையை மட்டும் பின்னு விடுங்க நான் வீட்டுக்கு போறேன் அப்படின்னு சொன்னேன் உடனே டேய் பூ னா பொண்ணுங்க தான் வச்சுக்கணும்ன்னு இல்லடா ஆம்பளைங்களும் வச்சுக்கலாம் அப்படின்னு சொன்னாங்க சும்மா விளையாடாதீங்க ஆன்ட்டி எந்த ஆம்பளைங்க பூ வச்சிருக்காங்க அப்படின்னு கேட்டேன் உடனே டேய் ஆம்பளைங்களும் பூ வச்சுக்குவாங்க ஆனா அவங்களுக்கு தலை முடி அதிகமா இல்லாதனால காதுல வச்சுப்பாங்க , ஒருவேளை அவங்களுக்கும் முடி நீளமா இருந்தா தலையில் தான் வச்சுப்பாங்க! உனக்கு தான் தல முடியே இவ்வளவு இருக்கே அப்புறம் என்ன அப்படின்னு கேட்க எனக்கு மனசு ஏத்துக்கவே இல்ல ப்ளீஸ் ஆன்ட்டி வேணா ஆன்ட்டி எனக்கு ஒரு மாதிரி இருக்கு அப்படின்னு சொன்னேன். டேய் ரெண்டு முலம் பூ உன்னை என்ன கொன்னுடவா போகுது அதுவும் நம்ம கிராமத்தில் இருக்கிறதே அங்கங்க இரண்டு வீடு உன்னை யாரு பாக்க போற சொல்லபோனா உங்க அம்மாக்கு கூட தெரிய போறது இல்ல இதனால் என்ன ஆகிட போகுது அப்படின்னு சொன்னாங்க உடனே அனிதா அவன் கிட்ட சும்மா பேசிக்கிட்டே இருக்காதாமா இந்தா வச்சு விடு அப்படின்னு சொல்லி அவங்க கையில பூவ கொடுக்க என் விருப்பம் இல்லாமையே எனக்கு தேவி ஆன்ட்டி இரண்டு முழம் மல்லிகை பூ வச்சு விட்டாங்க.
தெல்லாம் மல்லிகைப் பூவே தோள்பட்டைல வந்து விழுகிறதும் என் தலையில இருக்க ஒரு சின்ன கணமும் நான் பூ வச்சிருக்கேன் என்பதை எனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இருந்துச்சு.
தொடரும்........
Comments