அனிதா வீட்டிற்கு சென்று சாப்பிட்டேன் அனிதாவுக்கு அவங்க அம்மா தலை வாரிவிட்டு போனிடைல் போட்டு விட்டாங்க எனக்கும் சாப்பிட்டு முடித்த உடனே தலைவாரி விட்டு ஜடை பின்னி விட்டார்கள் நான் ஆன்ட்டி அவளுக்கு போட்ட மாதிரி எனக்கும் போனிடையிலே போட வேண்டியதுதானே எதுக்கு எனக்கு மட்டும் ஜடை பின்னி விடுறீங்க அப்படின்னு கேட்டேன் உடனே தேவி ஆண்ட்டி உன்னைவிட அவளுக்கு முடி கம்மி டா அதனால போன டைல் போட்டாவே போதும் உன் முடி இருக்குற அடர்திக்கும் நீளதுக்கும் போனி போட்டா உன்னுடைய முடி தான் டேமேஜ் ஆகும் அதுனால தான் ஜடையே போட்டுவிட்டேன் அப்படீன்னு சொன்னாங்க! சரி பரவால்ல ஆன்ட்டி அப்படின்னு சொல்லிட்டு டிவி பாத்துட்டு இருந்தோம் அப்போ ரொம்ப போர் அடிச்சு ஏதாவது விளையாடலாமா அப்படின்னு நான் கேட்டேன் உடனே அனிதாவும் தேவி ஆண்டியும் சரிடா என்ன விளையாடலாம் என்று கேட்க நான் ஆன்ட்டி எங்க வீட்ல தான் கேரம்போர்டு இருக்குல்ல அதை எடுத்துட்டு வரேன்னு சொல்லி வீட்டுக்கு வந்து கேரம் போர்டு எடுத்தேன் ஆனா அதோட காயின்ஸ் எல்லாம் எங்க வச்சேன்னு தெரியல வீடு முழுக்க தேடிப் பார்த்தும் கிடைக்கல சரின்னு தேவி ஆண்ட்டி வீட்டுக்கு வந்து சொன்னேன் காயின்ஸ் எங்க வச்சேன்னு தெரியல ஆண்ட்டி கிடைக்கல இப்ப என்ன பண்றது போர் அடிக்கும் அப்படின்னு சொன்ன உடனே சஞ்சய் என்னை பார்த்து நான் கிரிக்கெட் விளையாட தான் போறேன் வேணும்னா வரீங்களா அப்படின்னு கூப்பிட்டான் எனக்கு தயக்கமா இருந்துச்சு முன்னாடி மாதிரி இருந்திருந்தால் போய் இருப்பேன் இப்ப பொண்ணு மாதிரி இவ்வளவு முடிய வச்சிட்டு எப்படி போறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதையே தான் தேவி ஆண்டியும் அனிதாவும் சொன்னாங்க. இல்ல பரவால்லடா நான் வரல விடு அப்படின்னு சொல்லிட்டு வீட்டிலேயே இருந்தேன் அப்பொழுது தேவி ஆன்ட்டி உனக்கு போர் அடிக்க கூடாது அவ்வளவு தானே இரு வரேன் அப்படின்னு சொல்லி பல்லாங்குழி எடுத்து வந்தாங்க
இது எப்படி ஆன்டி இது எனக்கு விளையாட தெரியாது அதுவும் இது பொண்ணுங்க விளையாடுற விளையாட்டு நான் எப்படி விளையாடுவது அப்படின்னு கேட்டேன் உடனே அனிதா டேய் பல்லாங்குழி ஒன்னும் பொண்ணுங்க விளையாடுற விளையாட்டு இல்ல அது புத்திசாலிங்க விளையாடுற விளையாட்டு இதுல எவ்வளவு கணித அறிவு இருக்கு தெரியுமா அப்படின்னு சொல்லி வா விளையாடுவோம்னு சொன்னா. நானும் வேற வழியில்லாமல் சரி வா விளையாடுவோம் என்று சொல்லி நான் தேவி அத்தை அனிதா மூணு பேரும் சேர்ந்து ஒண்ணா பல்லாங்குழி விளையாண்டோம்.
அப்படியே மாலை வரை நேரம் போனது நானும் ஆன்ட்டி இருங்க நான் வீட்டுக்கு போயிட்டு லைட் மட்டும் போட்டுட்டு வந்துடறேன் அப்படின்னு சொல்லி போனேன் அப்பொழுது பூ விர்க்கும் அக்கா அந்தப் பக்கமாக போக தேவி ஆண்டி அனிதாவுக்காக இரண்டு மூலம் பூ கொடுங்கம்மா அப்படின்னு கேட்க அந்த பூக்கார அக்காவோ எல்லா பூவும் வித்துடுச்சு மா மல்லிகை பூ மட்டும்தான் நாலு முழம் இருக்கு நீங்க தான் கடைசி போனி மொத்தமா நாலு மூலமா வாங்கிக்கோங்க அப்படின்னு கேட்க இல்ல வேண்டாமா எனக்கு ஒரு பொண்ணு தான் இருக்கா இரண்டு முழம் போதுமே அப்படின்னு சொல்ல அந்த பூக்காரம்மா இல்லமா எனக்காக வாங்கிக்கோங்க இல்லாட்டி இந்த ரெண்டு முழத்துக்கு இன்னும் ரெண்டு தெருவு நான் கூவி கூவி விக்கணும் அப்படின்னு சொல்ல சரி கொடுங்க அப்படின்னு சொல்லி தேவி அம்மாவும் வாங்கிட்டாங்க.
தொடரும்.......
Comments