வெள்ளிக்கிழமை இரவு என்னுடைய ஜடைய விரித்துவிட்டு கொண்ட மட்டும் போட்டிருந்தேன் அப்போ அம்மா டேய் ஞாயிற்றுக்கிழமை என்னுடைய தோழி வீட்டுல ஒரு பங்க்ஷன் இருக்குடா நம்ம கண்டிப்பா போகணும் என் பையனையும் கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்கேன் அப்படின்னு சொன்னாங்க நான் வர முடியாது எனக்கு திங்கட்கிழமை டெஸ்ட் இருக்குமா சனி ஞாயிறு வீட்ல இருந்து படிச்சா தான் எனக்கு சரியா இருக்கும் அப்படின்னு சொன்னேன். டேய் ரெண்டு நாள் வீட்டுல இருந்து படிப்ப சரிடா சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்ணுவ அப்படின்னு கேட்க அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீங்க விடுங்க ன்னு சொன்னேன் சரி விடு நான் அனிதா அம்மா கிட்ட சொல்லிட்டு போயிடுறேன் ரெண்டு நாளு அவங்க வீட்டிலேயே சாப்பிட்டுக்கோ பத்திரமா இருந்துக்கோ நான் ஊருக்கு போய்ட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க அன்னைக்கு நைட்டு புல்லா படிச்சிட்டு இருந்தேன் அப்படியே ஒரு 12 மணி வரைக்கும் படித்துவிட்டு தூங்கிட்டேன் காலையில ஆறு மணிக்கு அனிதா வந்து என்னை எழுப்பி காப்பி கொடுத்தா. சீக்கிரம் காபியை குடிச்சிட்டு குளிச்சிட்டு வீட்டுக்கு வாடா அம்மா இட்லி சுட்டு வச்சிருக்காங்க சாப்பிடலாம் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நானும் போயி குளிச்சிட்டு வந்துட்டேன். ரூமுக்கு போய் துணியை மாத்திட்டு தலை முடியை கொண்ட போட்டுக்கிட்டு அனிதா வீட்டுக்கு போனேன் அங்கே சஞ்சய் மற்றும் அனிதா சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க அனிதா அம்மா என்னை பார்த்து வாடா குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா பொம்பளைங்க கூட இவ்வளவு நேரம் குளிக்க மாட்டாங்க வந்து உட்காரு அப்படின்னு சொல்லி எனக்கு இட்லி எடுத்து பரிமாறனாங்க நானும் சாப்பிட்டு முடிச்சேன் சரி போய்ட்டுவரென் ஆன்ட்டி அப்படின்னு சொல்லி கிளம்பினேன் இருடா வீட்டுக்கு போய் என்ன பண்ண போற இங்கதான் அனிதா சஞ்சய் இருக்காங்கல்ல அவங்களோட இங்கே டிவி பாத்துட்டு இரு அப்படின்னு சொன்ன உடனே சரி என்று உட்கார்ந்து அவங்களோட டிவி பாத்துட்டு இருந்தேன் அப்பொழுது அனிதா ...மா என்னோட தல காஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன் எனக்கு தலையை பின்னிவிடுமா அப்படின்னு சொன்ன உடனே அவங்க அம்மாவும் அனிதாவோட துண்டை அவிழ்த்துவிட்டு தலைக்கு எண்ணெய் தேய்த்து தலையை பின்னி விட்டாங்க அப்பொழுது திடீர்னு என்னை கூப்பிட்டு டேய் அக்ஷய் நீயும் வந்து உட்காரு கையோடு உனக்கும் ஜடை போட்டு விடுறேன் அப்படின்னு சொன்ன உடனே எனக்கு ரொம்ப வெக்கமாயிடுச்சு இல்ல வேணாம் ஆன்ட்டி பரவால்ல எனக்கு கொண்ட போட்டு இருக்கிறதே வசதியா தான் இருக்கு அப்படின்னு சொன்னேன் டேய் உங்க அம்மா என்கிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் போய்ருக்கா ஒழுங்கா வந்து உட்காரு அப்படின்னு கூப்பிட்டு தலைக்கு எண்ணெய் தேய்த்து வாரி ஒத்த ஜடை போட்டு விட்டாங்க
எனது பக்கத்து வீட்டு அத்தை எனக்கு ஜடை பின்னி விடறது நினைச்சு எனக்கு ரொம்ப தர்ம சங்கடமாகவும் கூச்சமாகவும் அதே நேரம் சிறிது வெக்கமா இருந்துச்சு அப்பொழுது அனிதா கூட ஒன்னும் சொல்லல ஆனா சஞ்சய் தான் என்ன கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தான்.
அப்படியே அன்றைய நாள் சென்றது இரவு தூங்குறதுக்கு நான் எங்க வீட்டுக்கே போயிட்டேன் அடுத்த நாள் காலை ஞாயிற்றுக்கிழமை அதே மாதிரி காபி எடுத்துட்டு அனிதா வந்து எழுப்பி விட்டா குளிச்சிட்டு வீட்டுக்கு வாடான்னு சொல்லிட்டு போயிட்டா நானும் போய் குளிச்சிட்டு அனிதா வீட்டுக்கு போனேன்..........
தொடரும்.......
Comments