அப்படியே நாட்கள் சென்றது, ஒரு நாள் நான் காலையில எந்திரிச்சு குளிச்சிட்டு வந்தேன் அப்ப தலை எல்லாம் ஒரே ஈரம் அம்மா பார்த்துட்டு டேய் இப்படி தலை முடிய ஈரத்தோட விட்டா முடி எல்லாம் கொட்டி போயிரும்டா அப்படின்னு சொல்லு அதுக்கு நான் என்னமோ பண்ண முடியும் இவ்வளவு முடிய எப்படி நான் துவட்டுவது அப்படின்னு கேட்க நீ ஒன்னும் துவட்ட வேணாம் முதல்ல தலையில் துண்டை எடுத்து கட்டு அந்த துண்டே உன் தலையில் உள்ள ஈரத்தையெல்லாம் எடுத்துடும் அதுக்கப்புறம் சாம்பிராணி போட்டு காய வச்சுக்கோ அப்படின்னு சொல்லி கூப்பிட்டு தலையில் துண்டை கட்டி கொண்ட போட்டு விட்டாங்க அந்தத் தோற்றத்தில் என்ன பார்க்க எனக்கே ஒரு மாதிரி தான் இருந்துச்சு அரை மணி நேரம் கழிச்சு சொல்லுடா அம்மா துண்ட அவுத்து தலையை பின்னி விட்டுடறேன் அப்படின்னு சொன்னாங்க நானும் சரி என்று யூனிபார்ம் மாத்த ரூமுக்கு போயிட்டேன் யூனிஃபார்ம் மாத்திட்டு வந்ததுக்கப்புறம் அம்மா தலைமுடி காஞ்சுருச்சுமா அப்படின்னு சொன்னேன் சரி இங்க வாடா அப்படின்னு கூப்பிட்டு அவங்க முன்னாடி நான் உட்கார வைத்து துண்ட அவுத்துவிட்டு தலைமுடிக்கு நல்ல சாம்பிராணி புகை போட்டு எண்ணெய் தேய்த்து ரெட்ட ஜடை பின்னி விட்டாங்க
அப்பொழுது என்னுடைய தோழி அனிதாவும் கரெக்டா வீட்டுக்கு வந்தா சீக்கிரம் அத்தை அவனை இன்னுமா கிளப்பிவிட்டுட்டு இருக்கீங்க பொம்பள புள்ள நானே சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன் அப்படின்னு சொல்ல ,எங்க அம்மா உடனே உனக்கு என்னடி உனக்கு இருக்க முடிய கால் மணி நேரத்துல உங்க அம்மா பின்னி விட்டுருவா ஆனா என் பிள்ளைக்கு பாரு இடுப்பு வர முடி இருக்கு இத ஒரு அரை மணி நேரமாவது பார்த்து பின்னி விட வேணாமா அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் சிரிச்சாங்க. என்ன தலையை பின்னி விட்ட உடனே நான் கிளம்புறேன் மா அப்படின்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன் நானும் அனிதாவும் பேசிக்கிட்டு போயிட்டு இருந்தோம் அப்போ அவ சொன்னா சும்மா சொல்ல கூடாதுடா உன்னுடைய முடி நம்ம கிளாஸ்ல இருக்க பொண்ணுங்கள விட அதிகமா தான் இருக்கு.
எனக்கு கேட்க வெட்கமா இருந்தாலும் அதெல்லாம் என்னுடைய மரபு சம்பந்தப்பட்ட விஷயம் டி எங்க அம்மா முடியை பார்த்துருக்கேல்ல அதை விடு என்னுடைய அம்மாச்சி அவங்க அம்மா எல்லோரா உடைய முடி யும் இப்படித்தான் அடர்த்தியா நீளமா இருக்கும் அதே மரபு தானே எனக்கும் அப்படின்னு சொல்ல உடனே அவ டேய் உங்க அம்மா அவங்க அம்மா எல்லாரோட முடியும் நீளமா இருக்கலாம் ஆனா அவங்க எல்லாம் பொம்பளைங்கடா நீ பையன் தானே உங்க அப்பா தாத்தா கூட உன்னை கம்பேர் பண்ணாம உங்க அம்மா அம்மாச்சி கூட உன்னை கம்பேர் பண்ணிக்கிற பொம்பள மாதிரி அப்படின்னு சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. ச்சி லூசு மாதிரி பேசாத நீ முடிய பத்தி கெட்ட நாள சொன்னேன் சரி விடு அப்படின்னு சொல்லி பேசிட்டு ஸ்கூலுக்கு போயிட்டோம். வகுப்பறையில உட்கார்ந்து இருக்கும்போது அவ சொன்னதை நினைத்து எனக்கு யோசனையாகவே இருந்தது.
அப்படியே நாட்கள் செல்ல செல்ல பள்ளியில் என்ன கிண்டல் செய்வதும் சுத்தமா குறைஞ்சிடுச்சு நானும் சகஜமா ஸ்கூலுக்கு போக ஸ்டார்ட் பண்ணிட்டேன் அப்பொழுது வெள்ளிக்கிழமை இரவு....
தொடரும்.....
Comments