Skip to main content

With my maid ( final part )

பிறகு சொந்த பந்தங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவர் வந்து போட்டோ எடுத்துக் கொள்ள அன்றைய நாள் அப்படியே சென்றது


. அன்று இரவு அப்படியே புது புடவையிலேயே தூங்கிட்டேன். நைட் ஒரு கனவு எனக்கும் என் அத்தை பையன் ராஜேஷ் கல்யாணம் நடக்கிற மாதிரி, நாங்க ரெண்டு பேரும் மாலை மாத்திக்கிற மாதிரி, வீடு திருமண கோலத்தில் அலங்கரித்து இருந்தது சொந்த பந்தங்கள் எல்லாம் சுற்றி வேடிக்கை பார்க்க புடவை கட்டி நகை எல்லாம் போட்டு தலை நிறைய மல்லிகை பூவே அத்தை பையன பாக்க வெக்கப்பட்டு நான் நிக்க அவன் அருகில் வந்து என் இடுப்பை பிடித்து என்னை கண்ணோடு கண் வைத்து பார்க்க 




எனக்கு முத்தம் கொடுக்க கெட்ட வர அதிர்ந்து போய் எழுந்தேன்‌. பிறகு கொரோனா அலை ஒழிந்தது லாக் டவுன் எல்லாம் தளர்ந்தன எல்லா சொந்தக்காரங்களும் அவங்க அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க நான் அம்மா அக்கா பாட்டி மட்டும் தனியாக இருக்கிறார்கள் என்று அவங்களையும் அழைத்துக் கொண்டு எங்க ஊருக்கே வந்துட்டோம். பிறகு கல்லூரியில் போய் சேர்ந்தேன் என்னுடைய நீண்ட கூந்தலை பார்த்து முதலில் கூட படிக்கும் ஆண்கள் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கிண்டல் பண்ணாலும் போக போக ஒன்னும் சொல்லல ஆனா வீட்டில் இருக்கும் போது எப்பவாவது மட்டுமே ஜடை பின்னிக்கிறது இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். பெரும் போனி டைல் அல்லது மேன் பன் அதாவது கொண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஆனா எனக்குள்ள இருக்கு அந்த பெண் என்னை விட்டு போகல ஆனால் வீட்டில் உள்ள அம்மா அக்கா பாட்டி எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் புடவை கட்டி பூ வச்சு எனக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்துனது கூட மறந்துட்டாங்க அப்படியே நாட்கள் போக போக கொஞ்ச நாள்ல நானா அம்மாகிட்ட போயி உங்க தலை முடி ரொம்ப டிஸ்டர்பா இருக்குமா எனக்கு ஜடை பின்னி உடன் கேட்பேன் ஆரம்பத்துல அவங்க முகம் சுளிச்சாலும் போக போக பின்னி விட்டாங்க அப்படியே காலேஜுக்கும் போக ஆரம்பிச்சேன் அவங்களும் பெருசா ஒன்னும் கிண்டல் பண்ணல ஒரு நாள் வீட்டிற்கு காலேஜில் இருந்து திரும்பி வரும்போது என்னுடைய தோழி மதுமிதா என்கூட பேசிக்கிட்டே வந்துகிட்டு இருந்தா அப்பொழுது என்னிடம் கேட்டார் ஏன்டா பொம்பளைங்க மாதிரி இவ்வளவு முடி வளர்த்து வச்சிருக்க இப்ப எல்லாம் சிலை எல்லாம் கூட பண்ணிட்டு வர அது மேற்கொண்டு உனக்கு அலங்கரிக்க தோணலையா அப்படின்னு கேட்டா என்னடி சொல்ற அலங்கரிக்கணுமா அப்படி என்ன பண்ணனும் அப்படின்னு கேட்டேன் பூவாவில் அலங்கரித்து பாருடா ரொம்ப அழகா இருப்பேன்னு சொன்ன உடனே எனக்கு உள்ளுக்குள்ள வெட்கம் இருந்தாலும் பூவெல்லாம் பொம்பளைங்க வைக்கிறது டி நீ ஏன் இப்படி சொல்ற அப்படின்னு கேட்டதுக்கு சும்மா ட்ரை பண்ணி பாருடா அப்படின்னு சொன்னா போடி லூசு அப்படின்னு வீட்டுக்கு வந்துட்டேன் அன்று வெள்ளிக்கிழமை வீட்டில் சாமி கும்பிட்டு இருந்தாங்க அக்கா விற்கு அம்மா தலையில் பூ வைத்து விட்டு இருந்தாங்க 40 தான் உள்ள போனேன் எனக்கு மதுமிதா சொன்ன ஞாபகம் வந்துது நேரா அம்மா கிட்ட போய் கேட்கலாம் தோணுச்சு ஆனா ஏதோ என்னை தடுத்தது அது என்னன்னா கடைசியா நான் பொண்ணா இருந்த நாள் எனக்கு விழா நடந்த நாள் அன்று இரவு எங்க அம்மா என்னிடம் கூறியது என்னோட பையன் என்னைக்குமே பையனா தான் இருப்பான் எனக்கு நம்பிக்கை இருக்கு இதெல்லாம் விளையாட்டுங்கிறது அவனுக்கும் தெரியும் அதனால தான் நான் இதெல்லாம் பண்றேன் அப்படின்னு சொன்னதுதான் இருந்தாலும் என்னுடைய கண்ணும் என்னுடைய மனதும் மல்லிகை பூ மேல தான் இருந்தது. நேரா அம்மாகிட்ட போய் அம்மா காலேஜ்ல ஒரு பிரிண்ட் ஜடைய புடுச்சு இழுத்தாளா அப்படியே லூசாயிடுச்சுமா நான் போய் முகத்தை கழுவிட்டு வரேன் எனக்கு இந்த ஜடையை மட்டும் பின்னி விட்ருமா அப்படின்னு சொன்னேன். எதை நினைச்சு சொன்னேன்னா அக்காவுக்கு அப்பதான் ஜடை பின்னி பூ வச்சு விட்டார்களா பக்கத்திலேயே ஒரு கவர்ல இன்னும் கொஞ்சம் மல்லிகை பூ இருந்தது இந்த நேரத்துல கரெக்டா கேட்டா தான் நமக்கு கொஞ்சம் ஜடை பின்னிட்டு அப்படியே போய் வைத்து விடுவார்கள் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு நினைச்சு கேட்டேன் சரிடா போய் முகத்தை கழுவிட்டு வா என்று சொல்லவும் கழுவிட்டு வந்தேன் வந்து ஜடை பின்ன ஆரம்பிச்சாங்க அப்படியே பின்னி முடித்த பிறகு  அம்மா எந்திரிச்சு போக நான் என்னம்மா முடிச்சிட்டியா அப்படின்னு கேட்டேன், முடிச்சிட்டேன்டா நீ ஏன் இன்னும் திரும்பியே உக்காந்து இருக்க எந்திரிச்சு போடா அப்படின்னு சொல்ல, ஏம்மா அவ்வளவுதானா அப்படின்னு நான் கேட்க வேற என்னடா அப்படின்னு அவங்க கேட்க, மல்லிகை பூ இல்லையா அப்படின்னு கேட்டேன் எதுக்குடா இப்பதான் உன் அக்காவுக்கு வைத்து விட்டேன் மீதி நாளைக்கு வச்சுக்கிறேன்னு சொன்னா அதனால பிரிட்ஜ்ல வச்சிருக்கேன் ஏண்டா கேக்குற அப்படின்னு கேட்டாங்க. இல்லம்மா எனக்கு இல்லையா அப்படின்னு கேட்டேன் உனக்கா உனக்கு வேணுமா என்ன ? அப்படின்னு அவங்க கேட்க ஆமாமா தலை வலிக்கிற மாதிரி இருக்கு மல்லிகை பூ வச்சா அது ஒரு புத்துணர்வு கொடுக்கும் அதான் எனக்கு இல்லையா ? ஓஹோ பூ வச்சிக்கிறது இல்ல அவ்வளவு ஆசையா என சிரித்துக் கொண்டே எங்க அம்மா எடுத்துட்டு வந்து திரும்புடான்னு சொல்லி என் தலையில் வைத்து விட எங்க அக்கா ஒரு மாதிரி பார்த்தா. அடுத்த நாள் காலையில காலேஜ் கிளம்பும்போது எனக்கு பூ வச்சுட்டு போனும்னு ஆசை வந்துடுச்சு வீட்ல எப்படி கேட்கிறது என்று தெரியாமல் காலேஜ் கிளம்பிட்டேன் போற வழியில ஒரு பூக்கடையில் நின்னு கேட்க சங்கடமா இருந்தாலும் வாய்விட்டு இரண்டு முலம் மல்லிகை பூ குடுங்கம்மா அப்படின்னு கேக்க அவங்களும் கொடுக்க அப்ப  பின் எதுவும் எடுத்துட்டு வராதனால பேக்க்குள்ள வச்சுட்டு காலேஜ் போயிட்டேன் அங்க போன உடனே மதுமிதா பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சேன் அவளும் எதுக்குன்னு தெரியாம என்ன பாத்து சிரிச்சா மதிய நேரம் காலேஜ் முடிந்தது இரண்டு பேரும் பேசிட்டு வீட்டுக்கு போனோம் அப்பொழுது அவகிட்ட நான் ஒன்னு கேட்பேன் அதுக்காக நீ கிண்டல் பண்ண கூடாது அப்படின்னு சொன்னேன் பரவால்ல கேளுடா என்று சொன்னா பையில இருந்த மல்லிகை பூ எடுத்து அவள் கைல கொடுத்து அந்த பூவே எனக்கு வச்சு விடுறியா ன்னு கேட்டேன் அவளுக்கு ஒரே ஷாக் டேய் என்னடா சொல்ற ஒரு விளையாட்டுக்கு இவ்வளவு முடி வளர்த்திருக்க பூ வச்சு பாரு அழகா இருக்குன்னு சொன்னா நீ பூவை வாங்கிட்டு வந்து என் கையில் கொடுத்து வைத்து விட சொல்ற அப்படின்னு சொன்னா உடனே அவ கிட்ட என்னுடைய பழைய கதை எல்லாம் சொன்னேன் என் வீட்ல நடந்தது எல்லாத்தையும் அவளுக்கு சொல்ல ஒரே ஆச்சர்யம் பிறகு வா என் வீட்டுக்கு போலாம் என்று அவளை கூட்டிட்டு போய் எங்க அம்மா அக்கா பாட்டி கிட்ட எல்லாம் அறிமுகப்படுத்தி விட்டேன். என் குடும்பத்தையும் என்னையும் பார்க்க அவளுக்கு ரொம்ப சந்தோசம் அவ கூட நான் அன்பா பழகுவதை பார்த்து என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சி இதற்கு இடையில் என் அத்தை பையன் அத்தை பொண்ணுங்க எனக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது , புடவை கட்டுனது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நான் மறக்க மதுமிதாவிடம் அதிக நேரம் செலவழிக்க நாட்கள் அப்படியே கடந்தது .


ஒரு நாள் என்னை காதலிப்பதாக மதுமிதா கூறினார் எனக்கும் அதில் மகிழ்ச்சி நானும் உன்னை காதலிக்கிறேன் எனக்கூறி அன்று முழுவதும் காலேஜை கட் அடித்து விட்டு இருவரும் சினிமா பூங்கா என சுற்றினோம் இரவு வீட்டிற்கு வரும்போது அவள் எனக்கு ஒரு முத்தம் கொடுக்க இத்தனை வருடங்கள் கழித்து முதல் முறை என் ஆண்மையை நான் உணர்ந்தேன் அப்படியே வீட்டுக்கு வந்து கண்ணாடியில் என்ன பார்த்தா ஜடை பின்னி ஒரு பொண்ணு போல இருந்த தோற்றம் எனக்கே புடிக்கல காலையில் அம்மாவிடம் சொல்லி முதலில் முடியை வெட்ட வேண்டும் என யோசித்து கொண்டு படுத்து உறங்கினேன். அன்று ஒரு கனவு அதில் முடி வெட்டப்பட்டு இருந்த நான் என் அத்தை பையன் ராஜேஷின் திருமணத்தில் அவனுடன் துணை மாப்பிள்ளையாக நின்று கொண்டிருக்கிறேன் வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசையில். உறவினர்கள் சூழ மணப்பெண் அங்கிருந்து நடந்து வர மணப்பெண் கழுத்தில் ராஜேஷ் தாலியை கட்ட அதிர்ந்து போய்  எழுந்தேன். நல்லவேளை கனவு என தோன்றியது பின்னர் மதுமிதா மனதிற்குள் வந்தால் என்ன இது காலையில் தான் மதுமிதா என்ன லவ் பண்றேன்னு சொன்னா நானும் அவ்வளவு லவ் பண்றேன் அதனால அக்சப்ட் செஞ்சேன். இரவு என் அத்தை பையன் ராஜேஷ்க்கு கல்யாணம் ஆகுற மாதிரி கனவு வந்துச்சு ஆனா ராஜேஷ் இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுறது என்னால ஏத்துக்க முடியாம கனவில் இருந்து எழுந்துட்டேன் என் மனசுக்குள்ள ஏன் இப்படி ஒரு குழப்பம் என்னால ஒரு ஆம்பளையா மதுமிதாவை ஏத்துக்க முடியுது ஆனால் ராஜேஷ்க்கு இன்னொரு பொண்ணு கூட கல்யாணம் நடந்தா எனக்கென்ன ஏன் என்னால ஏத்துக்க முடியல அப்படின்னு எனக்குள்ள பல கேள்விகள் அதுக்கப்புறம் கனவில் பார்த்த என்னுடைய தோற்றம் எனக்கு ஏதோ ஒரு வித அருவருப்பை கொடுத்தது ஆண்கள் போல முடிவெட்டுல என்னோட மூஞ்சில மீசை எல்லாம் இருக்கிறத பாத்தா எனக்கே ஒரு வித்தியாசமான உணர்வு அது நான் கிடையாதுன்னு எனக்கே தோணுது!. காலையில் எழுந்து போய் குளிச்சிட்டு வந்தேன் வந்து கண்ணாடியில் என்னை பார்த்து கொண்டு இருந்தேன் அப்பொழுது கண்ணாடியில் பொட்டு ஒட்டிக்கிட்டு இருந்தது அதை பார்த்த உடனே அந்த போட்டோ எடுத்து நெத்தியில வெச்சி பார்த்தேன் என் முகத்தை பார்க்க பார்க்க எனக்குள் அப்படி ஒரு ஆனந்தம். எனக்கு இந்த முகம் தான் பொருத்தமாய் இருக்கும் தோணுச்சு என் முகத்தில் மீசையவும் இல்லை என் கூந்தல வெட்டுநாளோ அந்த உருவம் எனக்கு நல்லா இருக்காதுன்னு தோணுச்சு. உடனே நேரா அக்கா ரூமுக்கு போய் அக்காவோட சுடிதார் ஒன்னு எடுத்து போட்டுக்கிட்டேன் வெளிய வந்து நானே எனக்கு தலை பின்னிட்டு பிரிட்ஜ்ல போயி இருந்த மல்லிகை பூ எடுத்து நானே என் தலையில வச்சுக்கிட்டு கண்ணாடி முன்னாடி வந்து நின்னு என்னை பார்த்து இது தாண்டி நீ ஒன்னும் ஆம்பள இல்ல நீ ஒரு பொண்ணு உனக்கு புடவை கட்டினா பொட்டு வச்சுகிட்டா தலைநிறைய பூ வச்சிக்கிட்டா தான் அழகு அப்படின்னு தோணுச்சு. அப்படியே ரூமை விட்டு வெளியே வந்து வீட்டு வெளி கதவை திறந்தேன் அப்போதான் எனக்கு ஒரு அதிர்ச்சி அப்ப பார்த்தா எங்க அம்மா அக்கா ரெண்டு பேரும் வாசல்ல நின்னுகிட்டு இருந்தவங்க என்ன அதிர்ச்சியா பாத்தாங்க என்னுடைய பாட்டியும் அங்க நின்னுகிட்டு இருந்தாங்க ஆனா அதெல்லாம் விட பெரிய அதிர்ச்சி ராஜேஷம் மதுமிதாவும் எதிர்பாராத விதமா எங்க வீட்டுக்கு என்ன பாக்க வந்தது தான் அதுவும் என் கனவு உலகத்துல நான் புருஷனா நினைச்சுகிட்டு இருக்க என்னுடைய ராஜேஷும் ,என் நிஜ உலகத்துல என்ன புருஷனா நினைச்சுகிட்டு இருக்க மதுமிதாவும் என்ன சுடிதார்ல கையில வளையல் ,கால்ல கொலுசு ,காதுல தோடு நெத்தியில பொட்டு, தலை நிறைய மல்லிகை பூவோட என்ன பாக்குறது தான். ரெண்டு பேரையும் நான் பார்க்க என்னால பேச முடியல

எனக்குள்ள இருக்க உணர்வு என்னால சொல்ல முடியல இது என்ன மாதிரி உணர்வு எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது இதுல எது சரி எது தவறு என்ன முடிவு எடுக்க முடியாத நிலையில்!.......

இக்கதையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் தோழிகளே.

Comments

Iron man said…
🥰🥰🥺🥺
Nidhi said…
Please write in English also
Nidhi said…
Please write in English also
Anandhi said…
Thank you pa 🥰
Anandhi said…
I will try my best pa 😊

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...