என் பெயர் அக்ஷய் , எங்க அம்மா பெயர் நர்மதா எங்க அப்பா பேரு சங்கர் நாங்க நாகர்கோவில்ல அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறோம். இது கிராமம் என்பதால் மிக குறைந்த வீடுகள் மட்டுமே இங்கு உள்ளன. எங்கள் வீட்டின் அருகில் ஒரு குடும்பம் உள்ளது தேவியேனும் ஒருவரும் அவர்களுக்கு அனிதா மற்றும் சஞ்சய் எனும் இரு பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். தேவிக்கு கணவர் இல்லை. இதில் எனக்கும் அனிதாவிற்கும் ஒரே வயது சஞ்சய் எங்களை விட மூன்று வயது சிறியவன் அவர்கள் எங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் எங்கள் குடும்பமும் அவங்க குடும்பமும் உறவினர்கள் போல நெருங்கி பழகி வந்தோம்.
நானும் அனிதாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எங்கள் ஊரின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நாங்கள் படித்து வந்தோம் அப்பொழுது நானும் அனிதாவும் எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம் சஞ்சய் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். அன்று ஒரு நாள் நானும் அனிதாவும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ வயிறு ரொம்ப வலிக்குதுன்னு சொன்னா சரின்னு சஞ்சய் மட்டும் ஸ்கூலுக்கு போக சொல்லிட்டு நான் அனிதாவை கூப்பிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் அன்னைக்கு நானும் ஸ்கூலுக்கு போகல ரூமுக்கு போய் அப்படியே தூங்கிட்டேன் நைட் அம்மா சாப்பிட வந்து எழுப்பினார்கள் அப்பொழுது கேட்டேன் அனிதா என்னம்மா ஆச்சு உடம்பு பரவாயில்லையான்னு, பரவாயில்லைடா அவ பெரிய மனுஷி ஆகிவட்டா அப்படின்னு சொன்னாங்க. அப்படின்னா என்னம்மா? அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா அப்படின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஒரு மாதம் கழித்து தான் அவ ஸ்கூலுக்கு வந்தா அப்பா அவ கிட்ட கேட்டேன் ஏன்டி வயசுக்கு வரது என்றால் என்ன அப்படின்னு அவளும் சீ போடா இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் உனக்கு எதுக்கு அப்படின்னு சொல்லிட்டு விட்டுட்டா. அப்படியே கொஞ்ச நாள் போக ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரப்போ சைக்கிள்ல இருந்து கீழே விழுந்துட்டேன் பெருசா ஒன்னும் அடி படல இருந்தாலும் வீட்டுக்கு வந்த உடனே காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி சாதாரண காய்ச்சல் தான் கொஞ்ச நாள்ல போய்விடும் அப்படின்னு பார்த்தா 15 நாட்களுக்கு மேல் இருந்தும் காய்ச்சல் போகல எவ்வளவோ மெடிக்கல் டெஸ்ட் எடுத்தோம் என்னன்னு தெரியல. அப்போதான் அப்பா சொன்னாரு பேசாம நம்ம குலதெய்வம் கோவிலுக்கு ஒரு தடவை போயிட்டு வந்துருவோம் ஏழு வருஷம் ஆச்சு குலதெய்வத்தை பார்த்து அதனாலதான் இப்படி எல்லாம் நடக்குதோ என்னவோ எதுக்கும் போயிட்டு வந்துடுவேன்னு சொல்லி எங்க குடும்பமும் தேவி அம்மா குடும்பமும் கிளம்பினோம். சாமி எல்லாம் கும்பிட்டுட்டு கிளம்பும்போது பூசாரி ஒரு நிமிஷம் நில்லுங்க அப்படின்னு சொன்னாரு நாங்க என்னன்னு கேட்டப்போ நீங்க எதுக்காக இங்க வந்தீங்க என்றது எனக்கு தெரியும் உங்க பையனுக்கு உடம்பு சரியில்லாம போனது உங்க குலதெய்வத்தோட கோபத்தால் தான். உங்க பையனுக்கு உடம்பு குணமாக வேணும்னா கடந்த ஏழு வருஷமா உங்க குல தெய்வத்தை நீங்க கவனிக்காம விட்டதுக்கு அடுத்த ஏழு வருஷம் உங்க பையன் முடி வளர்த்து இந்த கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் அப்படி செஞ்சீங்கன்னா உங்க குடும்பத்திற்கு அதுக்கப்புறம் எந்த பாதகமும் வராமல் இந்த தெய்வம் உங்களைப் பாதுகாக்கும் அப்படின்னு சொன்னாரு எங்க அம்மாவும் அப்பாவும் சரின்னு ஒத்துக்கிட்டாங்க இப்ப நான் எட்டாவது தான் படிக்கிற சின்ன பையன் அப்படிங்கறதால முடி வளர்க்கறது என்ன பெரிய விஷயமா அப்படின்னு நினைச்சு விட்டுட்டேன்.
தொடரும்......
Comments
Waiting for next
Next part eppo ??