மூன்று மணி நேரம் டிராவல் அதனால நல்லா தூங்கிட்டேன், எந்திரிச்சு பார்த்தா ஏன் ஸ்டாப்பில் ட்ரெயின் நின்னுச்சு உடனே ரெஸ்ட் ரூம் போனேன் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு பூவை எடுத்த டஸ்பின்ல போட்டுட்டேன் ஜடையை பிரித்து லூஸ் ஹேர் விட்டேன் . டிரெயின்ன விட்டு இறங்கினேன் எங்க அக்கா நின்னுகிட்டு இருந்தா என்னை பார்த்ததும் ஓடி வந்து எப்டி டா இருக்கன்னு சொல்லி கட்டி பிடிச்சா, எனக்கும் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாள் கழித்து எங்க அக்காவை பார்க்கிறேன், வாடா டாக்ஸி வெளியே நிக்குது போகலாம்னு சொல்லி கூட்டிட்டு போனா , ரெண்டு பேரும் பேசிகிட்டே டாக்ஸியில் போனோம் லாக் டவுன்ல ரொம்ப அழகாகிட்ட டா அப்படின்னு சொன்னா ஏன் இப்படி சொல்ற நான் கேட்டேன் இல்லடா உடம்பு வேற குறைச்சி இருக்க முடி வேற நிறைய வளர்த்திருக்க அழகா ஸ்டிக்கர் பொட்டு வேற வச்சிருக்க அதான் கேட்டேன் அப்படின்னு சொன்னா, உடனே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ட்ரெயின்ல தூங்கும்போது எதுவும் ஒட்டி இருக்கு அப்படின்னு சொல்லி பொட்டை எடுத்து தூக்கி போட்டேன்
ஏண்டா தூக்கிப்போட்ட உனக்கு லட்சணமா இருந்துச்சு டா அப்படின்னு சொன்னா எனக்கு உள்ளுக்குள்ள வெட்கம் நானா காட்டிக்காம விளையாடாத போடி அப்படின்னு சொன்னேன் முடி ஏண்டா இப்படி கண்ணா பின்னானு இருக்கு அப்படின்னு கேட்டா, இல்லக்கா hair curls பண்ணியிருந்தேன் விஜய் டிவி புகழ் இருப்பான்ல அந்த மாதிரி அதான் இப்படி இருக்கு அப்படின்னு சொன்னேன், டேய் அதுக்கு புகழ் அளவுக்கு முடி இருந்தால் நல்லா இருக்கும் உனக்கு புகழ் மாதிரியா இருக்கு புகழோடு ஆளு ஒருத்தி இருப்பாளே பவித்ரா அவள மாதிரி தான் இருக்கு உனக்கு அவ்வளவு நீள முடி அப்படின்னு சொன்னா, எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல ஓ அப்படியா இன்னும் என்ன எல்லாம் சொல்லுவ அப்படின்னு கேட்டேன், உடனே அவ சொன்னா சொல்லப்போனா ஜடை பின்னி அதை பிரித்து விட்டிருந்தா அப்படிதாண்டா இருக்கும் நீ என்ன ஜடையா பின்னிருந்தனனு கேட்டா எனக்கு வெட்கம் ஆயிடுச்சு ஆனா நான் பெருசா வெளியே காட்டிக்கல,
பேசாம இருக்கா வீடு வரைக்கும் அப்படின்னு சொன்னேன் சரிடா இப்படியே பேய் மாதிரி தலைய விரிச்சுப் போட்டு வராத திரும்பு போனி டெயில் போட்டு விடுறேன்னு சொன்னா ஓகேன்னு சொல்லி திரும்பினேன்
முதல்ல தலையை சீவி விட்டா, அப்ப மறுபடியும் சொன்னா இப்படி பேய் மாதிரி ஊருக்குள்ள போவாத, ஏன் உங்க ஊர் குழந்தைங்க பார்த்தா பயப்படுமா அதானே சொல்ல வர அப்படின்னு கோபமா கேட்டேன், இல்லடா இந்த ஊர்ல வயசுப்பசங்க ஜாஸ்தி அதனால சொன்னேன் அப்படின்னு சொன்னா. நான் எது பேசினாலும் என்ன பெண்மை படுத்தியே பேசினா எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு , அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் நான் போய் கதவை திறந்தேன்.
தொடரும்....
Comments