அக்கா அக்கா என்று எழுப்பினேன் அவளும் கண்ணை திறந்து பார்த்தால் என்னை பாவாடை தாவணியில் பார்க்கவும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஆச்சரியம் ஐயோ ரொம்ப நன்றி டி என் செல்ல தங்கச்சி எனக்காக இதை நீ பண்ணதுக்கு என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தா .
உடனே நான் அவரிடம் போய் குளித்துவிட்டு வா அப்படின்னு சொன்னேன் அவளும் குளிச்சிட்டு ஒரு பாவாடை தாவணி கட்டிட்டு வந்தா அப்பதான் எனக்கு ஒரு ஷாக் நான் போட்டிருந்த அதே கலர் தாவணி கட்டிருந்தா அப்பொழுது தான் எனக்கே தெரிஞ்சி இதெல்லாம் திட்டமிட்டு அவர்கள் செய்திருக்கிறார்கள். உடனே கோவமா அம்மாகிட்ட போனேன் நான் திட்டுவேன் அம்மா எதிர்பார்த்திருப்பாங்க ஆனால் நான் அதை செய்யாமல் மல்லிகை பூ இருக்குன்னு சொன்னியே எங்கம்மா இருக்கு அப்படின்னு கேட்டேன் அவங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு என்ன நம்மள திட்டுவான் நினைச்சா வந்து பூ எங்கன்னு கேட்டுட்டு போறான் அப்படின்னு சொல்லி பிரிட்ஜ்ல இருக்கு போய் எடுத்து கோடானு சொன்னாங்க நானும் அதை எடுத்துட்டு போயி குளித்துவிட்டு வந்த அக்காவோட கையில கொடுத்து இந்த அக்கா உன் தம்பிக்கு சாரி உன் தங்கச்சிக்கு உன் கையால பூ வெச்சி விடு அப்படின்னு சொன்னேன் அவளும் திரும்புடி என் செல்ல தங்கச்சின்னு சொல்லி வச்சு விட்டா பிறகு நானும் நீயும் திரும்பு என் செல்ல அக்கா உன் தங்கச்சி கையால பூ வச்சுக்கோன்னு சொல்லி நானும் அவளுக்கு வச்சு விட்டேன். பிறகு அவ கூட சேர்ந்து வீட்டு வேலை செய்றதுல இருந்து எல்லா வேலையும் பண்ண மாலை நேரம் அவுங்க கூட ஒக்காந்து ஒன்னா பூ கட்டினேன் மாலை நேரம் ஒண்ணா உக்காந்து சீரியல் எல்லாம் பார்த்தோம் அவ என்கிட்ட ஒவ்வொரு நடிகைகளோட புடவை தாவணி நகைகள் அதை பத்தி எல்லாம் பேச பேச எனக்குள்ள ஏற்பட்ட உணர்வுகளை வெளியே சொல்ல வார்த்தைகளே இல்லை . அன்று இரவு அம்மா என்கிட்ட வந்து கேட்டாங்க என்னை மன்னித்துவிடு டா உன்ன நாங்க திட்டமிட்டு ஏமாற்றி தான் பாவாட தாவணி கட்டவச்சோம் ஆனா நீ திட்டுவன்னு பார்த்தா நீ ஒண்ணுமே சொல்லலையே மனசுல எதுவும் வச்சுக்காதடா அப்படின்னு சொன்னாங்க நான் விடுமா பரவால்ல அப்படின்னு சொன்னேன்
உடனே அம்மா நீ சொல்றதெல்லாம் பார்த்தா உனக்கு தாவணி கட்ட புடிச்சு இருந்தது போல வேணும்னா சொல்றா உனக்கு மறுபடியும் கட்டிவிடுறேன் நீ எப்ப வேணுமோ தாவணி கட்டிக்கோ அப்படின்னு சொன்னாங்க அட போம்மா எதோ ஒரு நாள் அக்கா கேட்டா விளையாட்டுக்கு பண்ணா நீ வேற அப்படின்னு சொன்னேன் ,உடனே அம்மா டேய் பொய் சொல்லாதே உன்னோட கண்ணுல நான் பார்த்தேன் அது மட்டும் இல்லாம நேத்து நைட்டு ஜன்னல் வழியா பார்த்தேன் நீ எடுத்து உங்க அக்காவோட பாவாடை தாவணி கட்டிக்கிட்டு கண்ணாடி முன்னாடி நின்னத அப்படின்னு சொன்னாங்க. எனக்குள்ள பயங்கரமான அதிர்ச்சி ஆனா நான் வெளியில் காட்டிக்காம அது ஒன்னும் இல்லம்மா நீ வேற அக்காவை சர்ப்ரைஸ் பண்ணனும்னு சொல்லிட்ட அதனால முன்னாடி நாளே எப்படி இருக்குன்னு கட்டி பார்த்தேன் இதில என்ன இருக்கு அப்படின்னு கேட்டேன் உடனே அம்மா டேய் பொய் சொல்லாதே உன்னுடைய கண்ணுல நான் பார்த்தேன் அது மட்டும் இல்லாம நான் சினிமாவில் இருந்து எவ்வளவோ ஆண்கள் பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணி இருக்கத பார்த்து இருக்கேன் ஆனா அவங்களுக்கெல்லாம் இல்லாத ஒரு பெண்களுக்கே உண்டான நளினம் உன்னோட உடம்புல இன்னைக்கு நான் பார்த்தேன் ஏதோ எனக்கு தெரிஞ்சது சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம் அப்படின்னு சொன்னாங்க என்னம்மா என்னென்னமோ சொல்ற அப்படின்னு கேட்டேன் உண்மையை தான்டா சொல்றேன் மனசுல எது இருந்தாலும் எனக்கு சொல்லு அப்படின்னு சொன்னாங்க அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா போம்மா அப்படின்னு டேய் நான் உன்னுடைய அம்மாடா என்னிடம் சொல்ல மாட்டியா அப்படின்னு கேட்டாங்க உடனே நான் அம்மா கிட்ட அம்மா எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல நான் உன்கிட்ட ஒன்னு சொல்றது யாருகிட்டயும் சொல்லிடாத மா அப்படின்னு சொன்னேன், நான் உன்னுடைய அம்மாடா அப்படின்னு சொன்னாங்க நான் எட்டாவது படிக்கும்போது அக்கா ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தா அப்பொழுது திடீர்னு ஒரு நாள் வயிறு வலிக்குதுன்னு சொன்னா உடனே அவ வயசுக்கு வந்துட்டான்னு சொல்லி அவளை பெரிய பொண்ணு சொல்லி அவளுக்கு விழா கொண்டாடுனீங்க புதுசு புதுசா நகை எடுக்கிறது தாவணி கற்றது புடவை கட்டுவது அப்படி இப்படின்னு ரொம்ப சந்தோஷமா இருந்தா அப்போது எனக்கு தோணுச்சுமா என்ன அக்கா மட்டும் இவ்வளவு சந்தோஷமா இருக்கா எனக்கு எதுவுமே இந்த மாதிரி நடக்கலையேன்னு அப்புறம் தான் புரிந்தது அது பெண்களுக்கான விழா நான் ஒரு பையன் அப்படின்னு நானே விட்டுட்டேன் அதுக்கப்புறம் அந்த மாதிரி எண்ணங்கள் எனக்கு தோனுணது கிடையாது ஆனால் இந்த லாக்டவுன் காலங்களில் நம்ம வீட்டு வேலைக்காரம்மா இருக்காங்க இல்ல அவங்களோட பொண்ணு இறந்துட்டாங்க இல்ல உங்களுக்கு தான் தெரியுமே அதனால அவங்க என்ன பொண்ணு மாதிரி நெனச்சு என்கிட்ட பேசுறது பழகுவதெல்லாம் பண்ணாங்கம்மா அப்ப இருந்து மறுபடியும் எனக்கு அந்த எண்ணங்கள் வந்துச்சு நானும் ஒரு பொண்ணா பொறந்து இருந்தா நானும் வயசுக்கு வந்து இருப்பேன் எனக்கும் விழா எல்லாம் கொண்டாடி தலை நிறைய மல்லிகைப் பூ வச்சு விட்டு மஞ்சள் தண்ணீரில் குளிப்பாட்டி புது புது புடவை பாவாட தாவணி எல்லாம் கட்டி அழகு பார்த்திருப்பாங்க இல்ல அப்படின்னு ஆனா நான் பையன் என்கிற எண்ணம் என் மனசுக்குள்ள இருந்து கொண்டே இருந்ததால இதெல்லாம் பெருசா எடுத்துக்கலாமா அப்படின்னு ஓபனா சொல்லிட்டேன்
அம்மாவுக்கு பயங்கர ஷாக் நீ இப்படி எல்லாம் யோசித்து இருப்பேன்னு நினைச்சு கூட பாக்கல டா எதுவும் இந்த லாக்டவுன்ல முடி வளர்த்திருந்த அதனால உங்க அக்கா உன்னை கிண்டல் பண்ண நானும் உன்னை சேர்ந்து கிண்டல் பண்ணலம்னு நினைச்சேன் ஆனா உனக்குள்ள இப்படி எல்லாம் ஆசை இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை சரி விடுடா இதை பத்தி இனிமே பேச வேணாம் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்க எனக்கு அன்னைக்கு நைட் தூக்கமே வரல அதற்குப் பிறகு ஒரு மாதம் கழிந்தது அம்மா என்கிட்ட சரியா பேசவே இல்ல அந்த ஒரு மாதம் முழுக்க அந்த வீட்டிற்குள் அம்மாவை பார்க்கும் போதெல்லாம் என்னாலையும் சரியாக கூட பேச முடியல ஒரே சித்திரவதை அனுபவிச்சேன் அந்த ஒரு மாதம்
தொடரும்.....
Comments