அடுத்த நாள் விடிந்தது மீண்டும் அக்காவுடைய நைட்டி ஜடை பின்னிக்கிறது அப்படியே போச்சு அதற்கு அடுத்த நாளிலிருந்து என்னுடைய துணிகளை போட ஆரம்பிச்சுட்டேன் ஆனா தினமும் தலை முடிய ஜடை போட்டுக்கொள்வது மட்டும் மாத்திக்கல. சில நாட்கள் கழித்து அம்மா மற்றும் அக்கா அக்காவோட பிறந்தநாளுக்கு துணி எடுக்க போயிருந்தாங்க அதுல அக்காவும் அவளுக்கு ரொம்ப பிடிச்ச சுடிதார் மற்றும் பாவாடை தாவணியும் ரெடிமேட் பிளவுஸ் ஓட எடுத்திருந்தார் அதை அணிந்து பார்க்காமலே வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டா போல வீட்டுக்குள்ள அம்மாவும் அக்காவும் ஏதோ சத்தம் போட்டு பேசிட்டு இருந்தாங்க ரூமுக்குள்ள போன் நோண்டிக்கிட்டு இருந்தனா வெளியே வந்து என்ன சத்தம் என்று கேட்டேன் அப்போதைக்கு அம்மா சொன்னாங்க போட்டு பாக்காமயே சுடிதார் தாவணி எடுத்துட்டு வந்துட்டாடா ஆனா அவ உயரத்துக்கு பாவாடையும் ரொம்ப பெருசா இருக்கு சுடிதார் ரொம்ப லூசா இருக்கு சரி டைட்பண்ணி போட்டுக்கோன்னு சொன்னா எனக்கு வேணாம் அப்படின்னு சொல்றா டா திருப்பியும் கொடுக்க முடியாது என்ன பன்றதுன்னு தெரியல அப்படின்னு சொன்னாங்க உடனே அக்கா அம்மா எனக்கு தெரிஞ்சு அவன் சைசுக்கு எல்லாம் கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன் வேணா அவன போட்டு பாக்க சொல்லு அப்படின்னு சொன்னா நான் அடிச்சு போடுவேன் விளையாடாத அக்கா அப்படின்னு மிரட்டினேன் அம்மா உடனே டேய் நான் சொல்றேன் தப்பா எடுத்துக்காத எனக்காக ஒரு தடவ அந்த பாவாடை தாவணி கூட வேணாம் அந்த சுடிதார் போட்டு பாரு கரெக்ட்டா இருந்துச்சுன்னா இன்னைக்கு ஒரு நாள் தானே யாரு என்ன சொல்ல போற ஆல்ரெடி நைட்டி வேற போட்டு இருக்க பெருசா இதுல என்ன இருக்க போகுது ப்ளீஸ் டா அப்படின்னு கெஞ்சின நாளு சரின்னு ஒத்துக்கிட்டு அவங்களுக்கு போட்டும்
காமிச்சேன் அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஆச்சரியம் என்ன பாக்குறதுக்கு அந்த அளவுக்கு பெண்மையா இருந்தேன் போடும்போது கண்ணாடியில் பார்த்தேன் எனக்கும் பிடித்திருந்தால் அவங்க என்ன வற்புறுத்துவதற்கு முன்னாடி நானே சரி விடுங்க இன்னைக்கு சுடிதார் போட்டேன் இன்னைக்கு ஒரு நாள் ஃபுல்லா போட்டுகிறேன் இல்லாட்டி இன்னொரு நாளைக்கு போட்டுக்கோ போட்டுக்கோன்னு வற்புடுத்துவீங்க அப்படின்னு சொன்னே், உடனே அம்மாவும் அக்காவும் சிரிச்சாங்க. அப்போதைக்கு அக்கா சொன்னா டேய் உண்மைய சொல்லுடா உனக்கு சுடிதார் போட்டு இருக்க புடிச்சிருக்கு தானே அப்படின்னு சொன்னா ! சும்மா விளையாடாத அக்கா லூசு மாதிரி அப்படின்னு சொன்னேன்.டேய் பேசாம நாளைக்கு அந்த தாவனியும் கட்டிக்கோ ரொம்ப லட்சணமா இருப்ப அப்படின்னு சொன்னா சீ போடி அப்டின்னு சொன்னேன்,உடனே அக்கா அம்மா இங்க பாருமா என்ன போடி வாடின்னு பேசுறான் அப்படின்னு சொன்னா உடனே அம்மா விடுடி உன் தங்கச்சி தானே எப்படி பேசினால் என்னனு சொல்லி சிரிச்சாங்க எனக்கு கோவம் வந்தாலும் மனசுக்குள்ள சிரிப்பும் வெக்கமா தான் இருந்துச்சு அப்படியே அன்றைய நாள் கடந்தது, ஒரு வாரத்திற்கு பிறகு அக்காவிற்கு பிறந்தநாள்க்கு முன்னாடி நாள் அம்மா என்னிடம் வந்து நாளைக்கு அக்கா பிறந்தநாளுக்கு அவர் சந்தோஷப்படுத்துவதற்காக எனக்காக ஒன்று பண்ணுடா
நான் : என்னமா ?
அம்மா :அந்த பாவாடை தாவணி என்னை கட்டிக்கணும் அவ முன்னாடி தங்கச்சியா ஒரே ஒரு நாள் மட்டும் இருடா அவளுக்கு கூட பொறந்த ஒரு தங்கச்சி இல்லன்னு என்கிட்ட சொல்லி ரொம்ப நாள் வருத்தப்பட்டு இருக்கா அப்படின்னு கேட்டாங்க
நான் :என்னம்மா விளையாடுறியா அவளோட விருப்பம் உங்களோட விருப்பம்னு சொல்றீங்க என்ன பத்தி என்னைக்காச்சும் நினைத்து பார்த்தீர்களா நான் தான் வீட்டுக்கு ஒரே ஒரு ஆம்பள பையன் என்னையும் இப்படி பொண்ணு மாதிரியே எப்ப பாத்தாலும் ட்ரீட் பண்றீங்க அப்படின்னு கோவமா சொன்னேன் அம்மா ப்ளீஸ் டா அப்படின்னு கேட்டுகிட்டு இருக்கும் போது பாட்டியும் வந்தாங்க டேய் ஆனந்த் உன் பாட்டிக்காகவும் நாளைக்கு ஒரு நாள் மட்டும் அப்படின்னு கேட்டாங்க நான் முடியவே முடியாது போங்க அப்படின்னு சொல்லி கோவமா சொன்னேன் அவங்களும் ரூம விட்டு போய்ட்டாங்க இரவு நல்லா யோசிச்சு பார்த்தேன் அந்த பாவாடை தாவணி என்னோட கபோர்டுல தான் இருந்துச்சு சுற்றி யாரும் இருக்காங்களான்னு பார்த்தேன் யாரும் இல்லை சரி கட்டி பாப்போம் அப்படி எப்படித்தான் இருக்கும்னு எடுத்து பிளவுஸ போட்டு பார்த்தேன் அடுத்து பாவாடையை கட்டினேன் தாவணியை போட்டு பார்த்தேன் உண்மைய சொல்லணும்னா ரொம்பவே லக்சனமா இருந்தேன் என்ன கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்கணும்னு தோணுச்சு இந்த தாவணியை கழட்டவே வேணாம்னு தோணுச்சு இருந்தாலும் மனசுக்குள்ள நான் ஒரு பையன் என்கிற எண்ணமும் இருந்துச்சு சரி அக்கா ஆசைப்படியே காலைல அக்காவோட சேர்த்து அம்மா மற்றும் பாட்டி இருவரையுமே ஆச்சரியப்படுத்தலாம் சொல்லி தூங்கிட்டேன் காலை எழுந்தேன் குளிச்சிட்டு வந்து அக்காவுடைய பிரா ண்டியோட சேர்த்து அந்த பாவாடை தோணியும் கட்டிக்கிட்டேன், காலில் கொலுசு, கையில் வளையல், காதுல அக்காவுடைய தோடு என்று எல்லாத்தையும் போட்டு கண்ணாடி முன்னாடி நின்னு தலையை நல்ல சீவி பொட்டு வச்சுக்கிட்டு பாக்குறப்போ இவ்வளவு அழகா இருக்கியே டி உனக்கு ஏன் இப்படி வெட்டி பந்தா ஆம்பளைங்க மாதிரி ? இதோ பார் இதுதான் உனக்கு அழகு இனிமே இதவே மெயின்டெயின் பண்ணு அப்படின்னு கண்ணாடியில் என்ன பார்த்து நானே சொல்லி வெட்கத்தோடு சிரிச்சுகிட்டேன்.
ஆனா உள்ளுக்குள்ள ஒரு எண்ணம் அம்மா அக்கா பாட்டி முன்னாடி எப்படி இப்படி போய் நிற்கிறது என்று இருந்தாலும் ஏதோ ஒரு தைரியத்துல ரூம விட்டு வெளியே வந்து கிச்சனுக்கு போனேன் போய் காபி போட்டேன் அப்பொழுது கிச்சன் பக்கம் வந்த பாட்டி என்ன பாத்து ஆச்சரியத்தோடு ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள் யாருடா இது புது பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள அப்படின்னு அடுத்து அம்மாவும் வந்து பாத்துட்டாங்க ஐயோ என் இரண்டாவது பொண்ணு இவ்வளவு அழகா இருக்கியேடி அப்படின்னு சொல்லி முத்தம் கொடுத்து இருடி வயசு பொண்ணு தலையில பூ இல்லாம இருக்க கூடாதுன்னு சொல்லி பூ எடுத்துட்டு வந்து எனக்கு வைக்க வந்தாங்க நான் அதுக்குள்ள இருங்கம்மா நான் பூவ அக்கா கையால கொடுத்து அவ கையாலே என் தலையில் வைத்துக்கொள்கிறேன் அப்படின்னு சொல்லி அக்கா ரூமுக்கு போய் காபியோட அக்காவை எழுப்பினேன்.
தொடரும் ....
Comments